சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை ரோந்து! மாஸ்டர் ஸ்ட்ரோக்குகளால் அதிரவிடும் விஜய்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டத்தில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய முதல்வர் விஜய்யால் கொண்டு வரப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடங்கியுள்ளது. இந்த படையால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சட்டம், ஒழுங்கில் முழு அக்கறை வைத்து சிறப்பாக செயல்பட்டால்தான் மக்கள் நிம்மதியாக இருக்க முடியும். அந்த வகையில் திமுக ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என அதிமுக, தவெக, பாஜக,பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனங்களை தெரிவித்திருந்தன.

vijay launches singappen special task force

ஆங்காங்கே நடந்த கொலை, கொள்ளை, பெட்ரோல் குண்டு வீச்சு, வெடிகுண்டு வீச்சு, பலாத்காரம் உள்ளிட்டவைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு எதிராக பல கட்சிகள் பிரச்சாரம் செய்தன. அரசியல் தலைவர்களும் அன்றாடம் நடக்கும் இந்த குற்றங்களை குறிப்பிட்டு கண்டன அறிக்கையையும் வெளியிட்டு வந்தனர்.

இந்த நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை, கூட்டு வன்கொடுமையை தடுக்க சிங்கப்பெண் அதிரடி படை ஒன்று உருவாக்கப்படும் என தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார்.

அந்த வகையில் தவெக தற்போது ஆட்சி அமைத்துள்ளது. விஜய் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் போட்ட முதல் கையெழுத்தில் சிங்க பெண் சிறப்பு அதிரடி படைக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட உள்ளது. இத்திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது சேலத்தில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை வாகனத்தை சேலம் மாநகர காவல் ஆணையர் அனில்குமார் கிரி தொடங்கி வைத்தார்.

இது சேலம் மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும். இதில் காவல் உதவி ஆணையர், காவல் உதவி ஆய்வாளர், 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என 6 பேர் பணியாற்றவுள்ளனர்.

இந்த படைக்கு தேவையான 4 சக்கர வாகனம், தகவல் தொடர்பு சாதனங்கள், காவல் துறையினரின் உடல் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக காவல்துறையின் 'சிங்கப்பெண்' சிறப்புப் படை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது. அதன் செயல்பாடுகள் கீழே எளிமைப்படுத்தப்பட்டுள்ளன:

கண்காணிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்

பகுதிகளைக் கண்டறிதல்: குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து தீவிரமாகக் கண்காணிக்கின்றனர்.

ரோந்துப் பணி: பொது இடங்களில் தொடர்ச்சியாகச் சுற்றுக்காவல் (Patrolling) மேற்கொண்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றனர்.

அதிகரித்த பாதுகாப்பு: காவல்துறையின் இருப்பை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உறுதி செய்வதன் மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கின்றனர்.

முக்கிய இடங்கள்: பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஐடி (IT) நிறுவனங்கள் போன்ற பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றனர்.

உடனடி நடவடிக்கை மற்றும் மீட்புப் பணிகள்

விரைவுச் செயல்பாடு: பெண்களுக்கு எதிரான சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தகவல் கிடைத்தால் உடனடியாகத் தலையிட்டுத் தடுக்கின்றனர்.

புகார் தீர்வு: பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

மீட்பு மற்றும் ஆதரவு: பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ அல்லது சட்ட ரீதியான உதவிகள் மற்றும் மனநல ஆதரவு கிடைக்க வழிவகை செய்கின்றனர்.

ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வு

கூட்டுப்பணி: சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விழிப்புணர்வு முகாம்களை நடத்துகின்றனர்.

மக்கள் பங்களிப்பு: சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

முதன்மை இலக்கு: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தடுப்பு உத்திகளை (Prevention Strategies) வகுப்பதே இந்தப் படையின் மிக முக்கியமான நோக்கமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+