ஜெ.வை சந்தித்து சமாதானப்படுத்த கொடநாடு சென்று ஏமாந்த விஜய், எஸ்.ஏ.சந்திரசேகர்!
கோவை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தலைவா படம் தொடர்பாக பேச முயன்றுள்ளனர் நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும். ஆனால் முதல்வர் தரப்பிலிருந்து அனுமதி கிடைக்காததால் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டதாம்.
தலைவா படம் பெரும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. விஸ்வரூபத்திற்கு ஏற்பட்டது போன்ற சிக்கல் இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் விஜய்யும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் மூழ்கியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை சரணடைந்து சமரசமாகப் போக இருவரும் தற்போது முயற்சித்து வருகின்றனராம்.

கொடநாடு விரைந்தனர்
முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாட்டில் ஓய்வு மற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்திக்க விஜய்யும், சந்திரசேகரும் அங்கு விரைந்தனராம்.

அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை
முதல்வரைச் சந்திக்க வேண்டும், தலைவா படம் குறித்துப் பேச வேண்டும் என்று நேரம் கேட்டு அணுகினராம். ஆனால் அனுமதி கிடைக்கவில்லையாம்.

அதிர்ச்சியில் விஜய்
ஆனால் முதல்வரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். முதல்வரைப் பார்க்க முடியாததால் விஜய்யும், அவரது தந்தையும் தற்போது திரும்பி விட்டனராம்.

செக் போஸ்ட்டோடு நிறுத்தம்
விஜய்யும், சந்திரசேகரும் முதல்வரைப் பார்ப்பதற்காக வந்தபோது கெரடாமட்டம் என்ற சோதனைச் சாவடியோடு அவர்களை காவலர்கள் நிறுத்தி விட்டனராம்.
பாதியிலேயே நிறுத்தி தங்களை முதல்வர் தரப்பு திருப்பி அனுப்பி விட்டதால் பெருத்த ஏமாற்றத்துடன் இருவரும் திரும்பியுள்ளனராம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications