நடிகை ரம்யா டெஸ்ட் டியூப் பேபியா? சர்ச்சையை கிளப்பும் மாண்டியா தொகுதி எம்.எல்.ஏ
மாண்டியா: பிரபல கன்னட மற்றும் தமிழ் நடிகையான குத்து ரம்யா குறித்து கர்நாடக மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் ஒருவர் தனிப்பட்ட முறையில் விமர்சித்திருப்பது அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரம்யா அப்பா பெயர் தெரியாதவர், அவர் இயற்கையாக பிறக்கவில்லை. அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி என்றெல்லாம் அந்த அரசியல் தலைவர் பேசியுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இவ்வாறு ரம்யா குறித்து தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த மாண்டியா தொகுதி எம்.எல்.ஏவான எம்.ஸ்ரீனிவாஸின்பேச்சுக்கு கட்சி் தலைவர் குமாரசாமி கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

லோக்சபா இடைத் தேர்தல்
மாண்டியா லோக்சபா இடைத் தேர்தலுக்கான பிரசாரம் தற்போது நடந்து வருகிறது. அந்த கூட்டத்தில் பேசுகையில்தான் ஸ்ரீனிவாஸ் இப்படிப் பேசியுள்ளார்.
ரம்யாவின் வளர்ப்புத் தந்தை
தனது வளர்ப்புத் தந்தை ஆர்.டி.நாராயணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார் ரம்யா. இதை மேற்கோள் காட்டி ரம்யாவை தனிப்பட்ட முறையில் தாக்கியுள்ளார் ஸ்ரீனிவாஸ்.மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில்எம்.பி தேர்தலில் ரம்யா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கையாக பிறக்கவில்லை
அவர் கூறுகையில், ரம்யா இயற்கையாக பிறக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தியுள்ளது. ரம்யாவுக்கு அப்பா பெயர் தெரியாது. என்ன சாதி என்று தெரியாது. பிறந்த இடம் எது என்று தெரியாது. அவர் ஒரு டெஸ்ட் டியூப் பேபி என்று கடுமையாக பேசினார்.
ரேவண்ணா ஆதரவு
ஸ்ரீனிவாஸின் இந்தப் பேச்சுக்கு குமாரசாமியின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஸ்ரீனிவாஸ் உண்மையைத்தான் பேசியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.
குமாரசாமி மறுப்பு
இருப்பினும் குமாரசாமி ஸ்ரீனிவாஸ் பேச்சைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஸ்ரீனிவாஸ் பேச்சை நான் ஏற்கவில்லை. வருத்தம் தெரிவிக்கிறேன். தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசுவது தேவையற்றது. யாரும் இப்படிப் பேச முடியாது என்றார் குமாரசாமி.
மனிதநேயமற்ற பேச்சு
ஸ்ரீனிவாஸ் பேச்சு குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், இது மனிதநேயமற்ற பேச்சு, இதற்கு மாண்டியா மக்கள் சரியான பதில் தருவார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
ஸ்ரீனிவாஸுக்குச்சிக்கல்
இதற்கிடையே, ஸ்ரீனிவாஸ் பேச்சு குறித்த வீடியோ மற்றும் அறிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணய்யா கோரியுள்ளார். அதன் அடிப்படையில்ஸ்ரீனிவாஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications