For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'திரிபுரிலாந்த்' போராட்டத்தில் கலந்து கொள்ள போகும் தெலுங்கானா தலைவர்கள்!

By Mathi
Google Oneindia Tamil News

அகர்தலா: திரிபுராவில் பழங்குடி இனத்தவர் வாழும் பகுதியை பிரித்து திரிபுரிலாந்த் உருவாக்கக் கோரி நடைபெறும் போராட்டத்தில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்கள் கலந்து கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவைத் தொடர்ந்து தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர் என பல மாநிலங்களிலும் தனி மாநில கோரிக்கை எழுந்துள்ளது. இதில் திரிபுராவும் இணைந்து கொண்டுள்ளது.

திரிபுராவில் பழங்குடி இனத்தவர் நிர்வகித்து வரும் சுயாட்சி நிர்வாக கவுன்சிலை விரிவுபடுத்தி 'திரிபுரிலாந்த்' தனி மாநிலமாக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தும் விதமாக அகர்தலாவில் ஆகஸ்ட் 23-ந் தேதி இந்தியா முழுவதும் தனி மாநில கோரிக்கையை எழுப்பும் இயக்கங்களில் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா காய்ச்சல் திரிபுராவையும் விடவில்லையே..!

English summary
The decision to create a new state of Telangana out of Andhra Pradesh has enthused a tribal party in Tripura to reiterate its demand to make a separate state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X