புலித்தடம் தேடி.. வைகோ அறிமுகப்படுத்திய புத்தகம்!
சென்னை: புலித்தடம் தேடி.. ரத்த ஈழத்தில் 25 நாட்கள் என்ற இலங்கை பயண நூல் குறித்த அறிமுக நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்றார்.
சென்னையில் உள்ள மதிமுக தலைமைக் கழக அலுவலகமான தாயகத்தில் சனிக்கிழமை மாலை இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், வைகோ, ஓவியர் புகழேந்தி, இயக்குநர் வ.கௌதமன், திருமுருகன் காந்தி ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை பற்றி கருத்துரையாற்றினர்.
வைகோ பேசுகையில், இந்த நூலில் இதயத்தை வேதனையில் வாட்டுகிற பல செய்திகள் இருக்கின்றன. கனத்த இதயத்தோடு தான் இதை படித்து முடித்தேன். இந்நூல் தொடராக வெளிவந்த போது படித்ததை விட புத்தகமாக தொடர்ந்து படிக்கிற போது ஒரு தாங்கமுடியாத சோகம் மனதை கப்பிக் கொண்டது.

மகா துணிச்சல் வேண்டும். உயிரோடு திரும்ப முடியாது என்ற ஆபத்தை எதிர்கொண்டு போயிருக்கிறார் இந்த இளைஞர். கொழும்பு விமான நிலையத்தில் இறங்கி அவர் பயணத்தை தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே ராணுவம் விசாரித்ததும் போலீஸ் விசாரித்ததும் அடுத்து என்ன நடக்கும் என்ற விதத்தில் அபாயம் அவரை சூழ்ந்ததும் எச்சரிக்கையோடு மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று நிலைமையை பதிவு செய்திருக்கிறார்.
பரந்தனிலே கிளிநொச்சியிலே முல்லைத்தீவிலே யாழ்நகரிலே வல்வெட்டித்துறையிலே நந்திக்கடலிலே முள்ளிவாய்க்காலிலே புதுக்குடியிருப்பிலே புதுமாத்தளனிலே அந்த மரண ஓலம் ஒலித்து கொண்டிருந்த பகுதியிலே மகா.தமிழ்ப் பிரபாகரன் சென்று வந்திருக்கிறார்.
காமன்வெல்த் மாநாடு அங்கு நடந்தேறி விட்டால் கொக்கரிக்கும் சிங்கள தேசம் தமிழன் என்ற இனத்தையே இல்லாமல் ஆக்கிவிடும் என்றும் வைகோ தெரிவித்தார்.

-
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications