For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உணவு பாதுகாப்பு சட்டம்... முதலமைச்சர் கூட்டத்தை கூட்ட மோடி வலியுறுத்தல்

Google Oneindia Tamil News

Call chief ministers' meet on food security bill: Narendra Modi writes to PM
டெல்லி: மத்திய அரசால் கொண்டுவரப்பட உள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இந்திய பிரதமர் மக்மோகன் சிங்கிற்கு மோடி எழுதியுள்ள கடிதத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம்பந்தப்பட்ட விவகாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு அவசர சட்டமாக கொண்டுவந்துள்ள இந்த சட்டம், தனது முக்கிய நோக்கமான ஏழை எளிய மக்களுக்கு உணவு கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என்பதைக் கூட முழுமை படுத்த வில்லை என்று கடிதத்தில் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

' ஒரு பக்கம் திட்ட குழு ஆணையம், நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக குறிப்பிடுகிறது. ஆனால் இந்த சட்டமோ நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு உணவு கிடைப்பது உறுதி செய்யப்படுவதாக கூறுகிறது. இந்த முரண்பாடு நிச்சயமாக மாநில அரசுகளுடன் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்று', என குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Gujarat chief minister Narendra Modi has written a letter to Prime Minister Manmohan Singh proposing a meeting of chief ministers be held on the food security law saying it is an issue that concerns both the Centre and state governments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X