For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஷ்ரத் ஜஹான் என்கவுன்ட்டர்..வேற வழியே இல்லாமல் சரணடைந்த பிபி பாண்டே!

By Mathi
Google Oneindia Tamil News

Ishrat encounter case: SC rejects PP Pandey's anticipatory bail plea
டெல்லி: குஜராத் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தலைமறைவான போலீஸ் அதிகாரி பிபி பாண்டே இன்று விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பிபி பாண்டேவுக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இதையடுத்து முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இம் மனு நீதிபதி பி.எஸ். செளகான் தலைமையிலான பெஞ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த என்கவுன்ட்டர் வழக்கில் அவர் இன்னும் தலைமறைவாகத் தான் உள்ளார்.அவரது இந்த நடத்தையே, முன்ஜாமீன் கோரும் உரிமையை தடுக்கிறது. இதுபோன்ற நபர்களுக்கு உச்ச நீதிமன்றம் பாதுகாப்புக்கான புகலிடமாக உள்ளது. மேலிடத்தினர் நிவாரணம் பெற உச்ச நீதிமன்றத்தை அணுகுகின்றனர். இதன் மூலம், நீதிக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஏழை மக்களின் நேரத்தை அவர்கள் வீணடிக்கின்றனர் என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இனியும் தலைமறைவாக முடியாத நிலையில் இன்று காலை விசாரணை நீதிமன்றத்தில் பிபி பாண்டே சரணடைந்தார்.

English summary
The Supreme Court on Monday rejected the anticipatory bail plea of senior IPS officer PP Pandey, against whom a non-bailable warrant has been issued, in the Ishrat Jahan encounter case, saying his conduct in remaining absconding dis-entitled him for the relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X