இளவரசர் சார்லஸ் 65வது பிறந்தநாள்: பல கோடி ருபாயில் விருந்தளிக்கும் இந்திய கோடீஸ்வர தம்பதி
லண்டன்: வரும் நவம்பரில் தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸூக்கு பல கோடி ரூபாய் செலவு செய்து பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தளிக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளனர் லண்டனில் வசித்து வரும் இந்திய கோடீஸ்வரத் தம்பதிகள்.
லண்டனில் வசித்து வரும் இந்தியரான சைரஸ் வண்ட்ரேவலா, பங்கு பரிமாற்ற தொழிலதிபர். இவரது மனைவியான பிரியா இந்தியாவின் பிரபல நியல் எஸ்டேட் நிறுவனமான ஹிர்கோ குழுமத்தின் தலைவர். இந்த தம்பதிகளில் இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள். அறக்கட்டளைகள் மூலம் பல சமூக சேவைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வரும் நவம்பர் 14ம் தேதி தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்க்கு பிரமாண்ட விருந்தளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர் சரஸ் தம்பதியினர். இதற்காக பல கோடி ரூபாய் செலவில் பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரம்மாண்ட விருந்து தயார் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள் இத்தம்பதிகள்.
பிறந்தநாள் விருந்தில் லண்டன் இசைக்குழுவான பில்ஹார்மோனியா குழுவினரின் இசை நிகழ்ச்சியும், மது விருந்தும் அளிக்கத் திட்டமிட்டுள்ளார் சைரஸ். இந்தப் பிரமாண்ட விழாவினை பக்கிங்ஹாம் அரண்மனையில் நடத்த ராணி எலிசபெத் அனுமதி அளித்துள்ளார். மேலும், இங்கிலாந்தில் வசித்து வரும் பிரபல இந்தியர்கள் 250 பேர் மட்டும் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இளவரசர் சார்லஸின் இந்த பிரமாண்ட பிறந்தநாள் விழாவில் ராணி எலிசபெத் கலந்து கொள்வாரா என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications