For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2014 தேர்தல் அஸ்திரமான ‘வெங்காயம்’: கிலோ ரூ.40க்கு விற்று காங்கிரசை அழ வைக்கும் பாஜக!

Google Oneindia Tamil News

டெல்லி: 2014ல் சந்திக்க இருக்கும் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வெங்காயத்தை அஸ்திராமாகக் கையில் எடுத்து காங்கிரஸை சாய்க்க நினைக்கிறதாம் பாஜக.

வெங்காயத்தை உரித்தால் தான் முன்பெல்லாம் கண்களில் நீர் வரும். ஆனால், தற்போதோ வெங்காய விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது. வெங்காயம் இல்லாமல் சமியலும் ருசிப்பதில்லை.

தொடர்ந்து ஏறி வரும் வெங்காய விலையினால் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனைப் பயன் படுத்தி மக்களிடம் தங்கள் கட்சியின் செல்வாக்கைக் கூட்டத் திட்டமிட்டுள்ளதாம் பாஜக.

வியாபார தந்திரம்...

வியாபார தந்திரம்...

மக்களின் தேவையை உணர்ந்து செயலாற்றுவதில் பிசினஸ்மேன்களை விட அதிகமாக யோசிக்கிறார்கள அரசியல் வாதிகள். கடந்த சில தினங்களாக ஜவுளி, மோட்டார் வாகன பாகங்களை வாங்குவோருக்கு இலவச இணைப்பாக வெங்காயத்தைக் கொடுத்து லாபம் பார்த்து வருகின்றனர் காசியாபாத் வியாபாரிகள்.

தேர்தல் யுக்தி...

தேர்தல் யுக்தி...

இப்போது அவர்களையும் விஞ்சும் வகையில் வெங்காயத்தை அரசியல் ஆயுதமாக்கி வருகிறார்கள். அடுத்த வருடம் வரவிருக்கின்ற தேர்தலை மனதில் கொண்டு வெங்காயம் மூலம் காங்கிரஸை சாய்க்க திட்டமிட்டுள்ளனராம் பாஜகவினர்.

கிலோ 40 ரூபாயா..?

கிலோ 40 ரூபாயா..?

டெல்லியில் அரசு ஒரு புறம், மானிய விலையில் வெங்காயம் விற்பனை செய்வதற்காக நகரம் முழுவதும் நடமாடும் வேன்களை அறிமுகம் செய்துள்ள நிலையில், ஒரு கிலோ வெங்காயத்தை ரூ40க்கு வழங்கி வருகின்றனராம் பாஜகவினர்.

வெங்காயச் சோதனை...

வெங்காயச் சோதனை...

ஏற்கனவே, 1998ம் ஆண்டு, இந்தியா இதே போன்று வெங்காயச் சோதனையை சந்தித்ததை நினைவில் கொண்டு செயல் படுகின்றனராம் இரு கட்சியினரும்.

கள்ள மார்கெட் தான் காரணமா..?

கள்ள மார்கெட் தான் காரணமா..?

பாஜகவினர் ஊர் ஊராகச் சென்று, காங்கிரஸ் ஆட்சியில் வெங்காய விலை இவ்வாறு உயர்ந்ததின் பிண்ணனியில் இருக்கும் சதிகளையும் விளக்க திட்டமிட்டுள்ளனராம்.

இப்டி பண்ணிட்டாங்களேப்பா...

இப்டி பண்ணிட்டாங்களேப்பா...

நாடு முழுவதும் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறி, பாகிஸ்தானிடம் வெங்காயம் கேட்டு நிற்கும் நிலைக்கு மத்திய அரசு கொண்டு சென்று விட்டதையே தங்கள் தேர்தல் ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்களாம் பாஜக அரசியல் பிரமுகர்கள்.

English summary
New Delhi: Eyeing an early general election in 2014, BJP has started making preparations already. The BJP in Delhi has resorted to a novel idea of protest against increase in onion prices. Despite demands from all quarters, the Union government has failed to control the price of onions. In contrast to the onion rate of Rs. 50 a kilo that Congress will be selling in various outlets across the city, BJP will be selling onions at Rs. 40 per kilogram. BJP has accused the Congress of black marketing onions, thus, ripping into the pockets of common man
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X