காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மன்மோகன்சிங்குக்கு இலங்கை அமைச்சர் பீரீஸ் நேரில் அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்கை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளக் கூடாது என்று ஒட்டுமொத்த தமிழக அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.

SL Minister GL Peiris invites PM Manmohan Sing to attend CHOGM meet

இந்நிலையில் டெல்லி வந்த இலங்கை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் இன்று பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தார். அப்போது கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே சார்பில் அவர் அழைப்பு விடுத்தார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசியிருந்த பீரிஸ், காமன்வெல்த் மாநாட்டில் நிச்சயம் மன்மோகன்சிங் கலந்து கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+