நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் திடீர் மாயம்- நாடாளுமன்றத்தில் அமளி!!
டெல்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் திடீரென மாயமானது தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இன்று அமளியில் ஈடுபட்டதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் அனைத்து நாட்களுமே இரு சபைகளிலும் அமளிதான். ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல், தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு, தனி மாநில கோரிக்கைகள், பீகார் ரயில் விபத்து போன்ற பிரச்சனைகளால் ஒவ்வொரு நாளும் சபை நடவடிக்கைகள் முடங்கிப் போயின.
இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கூடிய போது, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு கோப்புகள் மாயமானது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளித்த பின்னரே சபை நடவடிக்கைகள் தொடங்க வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி.க்கள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்குதேசம் எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சபைகளில் கூச்சல், குழப்பம் நீடித்தது. இந்த அமளிக்கிடையே பல மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications