சிறுமியை சீரழித்த அறவழி சித்தருக்கு அரசியல்வாதிகளுடன் லிங்க்காமே...??
சென்னை: 14 வயது சிறுமியை அவரது தாயாரின் ஒத்துழைப்போடு பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் ஒரு விபச்சாரக் கும்பலிடம் ஒப்படைத்து அந்த சிறுமியை நாசப்படுத்திய சென்னை சாமியார் அறவழி சித்தருக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இந்த அறவழி சித்தர் நீண்ட காலமாக அப்பகுதியில் குறி சொல்லி வந்தவர் ஆவார். தற்போது பாலியல் பலாத்காரப் புகாரில் சிக்கியுள்ளார்.
இவர் மீது புகார் கொடுத்துள்ள 14 வயது சிறுமி, தனது தாயாரால்தான் தான் இந்த நிலைக்கு ஆளானதாக குமுறிக் கொண்டிருக்கிறார்.

48 வயது சித்தர்
48 வயதான அறவழி சித்தர் நீண்ட காலமாக குறி சொல்லியும், ஜோசியம் பார்த்தும் வருபவர் ஆவார். வியாசர்பாடியில்தான் இருக்கிறார்.

14 வயது சிறுமியை சீரழித்தார்
இந்த நிலையில் அவரிடம் திருமலர் என்பவர்தனது 14 வயது மகளை அழைத்து வந்து நன்றாகப் படிப்பதற்காக குறி சொல்லுமாறு கேட்கவே நள்ளிரவு பூஜைக்கு ஏற்பாடு செய்தால் எல்லாம் சரியாகும் என்று கூறியுள்ளார்.

நள்ளிரவு பூஜை
இதையடுத்து ஏற்பாடு செய்த நள்ளிரவு பூஜையின்போது சிறுமியிடம் தனது காமவெறியைத் தணித்துள்ளார் சாமியார்.

போதை ஊசி- போதை மருந்து
இந்த அக்கிரமம் குறித்து சிறுமி தனது தாயிடம் கூறியும் அவர் கண்டு கொள்ளவில்லை. இதைப் பயன்படுத்தி சிறுமியை அடிக்கடி வரவழைத்து அவருக்கு போதை மருந்து கொடுத்தும், போதை ஊசி போட்டும் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சாமியார்.

விபச்சாரக் கும்பலிடம் தள்ளிவிட்டார்
அத்தோடு நில்லாமல் ஒரு விபச்சாரக் கும்பலிடமும் சிறுமியை ஒப்படைத்துள்ளார் இந்த காமவெறி சாமியார்.

திருப்பதிக்கு தப்பி ஓட்டம்
பல மாதங்களாக அந்தக் கும்பலிடம் சிக்கித் தவித்து வந்த சிறுமி பின்னர் திருப்பதிக்கு தப்பி ஓடினார். அங்கு அவர் அனாதரவாக சுற்றித் திரிந்ததைப் பார்த்த சிலர் போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் விவரம் தெரிய வந்தது.

சித்தர் - தாயார் கைது
இதையடுத்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார் சிறுமி. போலீஸார் வழக்குப் பதிவு செய்து சித்தரையும், சிறுமியின் தாயாரையும் கைது செய்தனர். இவர்கள் போக சிறுமியை நாசப்படுத்திய ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர்.

15 வருடமாக அட்டகாசம்
கடந்த 15 வருடமாக இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக சித்தர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளாராம். மேலும் பல அரசியல்வாதிகளுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறியுள்ளாராம். அவர்கள் யார் யார் என்பது குறித்து போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர். காவல்துறை தரப்பிலும் கூட சில உயர் அதிகாரிகள் சித்தருக்கு சாதகமாக இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.












Click it and Unblock the Notifications