இலங்கை நட்பு நாடு இல்லை என்றால் அப்புறம்...: ஞானதேசிகன்

Subscribe to Oneindia Tamil

Gnanadesikan has a question for TN politicians
சென்னை: இலங்கை நட்பு நாடு இல்லை என்றால் ஈழத் தமிழர்களின் நலனுக்காக 13வது அரசியல் சட்டத் திருத்தம் குறித்து யாரிடம் பேச வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இலங்கையில் வாழும் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 4,000 கோடி ரூபாய் செலவில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிந்து வர, அங்கு நிருபர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இது குறித்து, காங்கிரஸ் மேலிடத்தில் எடுத்துக் கூறியுள்ளேன்.

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது; இலங்கை நட்பு நாடு கிடையாது என தமிழக அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். அப்படி என்றால் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக, 13வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம் குறித்து யாரிடம் பேச வேண்டும் என அந்தத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+