ஸ்ரீபெரும்புதூரில் வாகனத்தோடு ரூ.4 கோடி தங்கம் கொள்ளை: பெங்களூரில் பெண் உட்பட 6 பேர் கைது
சென்னை: ஸ்ரீபெரும்பத்தூர் அருகே ரூ. 4 கோடி தங்கம் நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் பெண் உட்பட 6 பேரை பெங்களூரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஓசூரில் இயங்கும் டாடா நிறுவனத்தில் இருந்து கடந்த திங்கள்கிழமையன்று சென்னையில் உள்ள அந்நிறுவனத்தின் விற்பனை நிலையங்களுக்கு ரூ.4 கோடி மதிப்பிலான தங்க நகைகள் வேனில் கொண்டு செல்லப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் வேனுடன் கடத்தி கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளைக் கும்பலைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. வேனில் இருந்த டிரைவர் ராஜேஷ், முன்னாள் ராணுவ வீரர் சுப்பிரமணி, சுப்பர்வைசர் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதில் வேன் டிரைவர் ராஜேஷ் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை கைது செய்து நடத்திய தீவிர விசாரணையில் அவரது மகன் கூட்டாளியுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முருகனை பிடிக்க தனிப்படை போலீஸார் ஒசூருக்கு விரைந்தனர்.
இதையடுத்து பெங்களூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த டிரைவரின் மகன் உள்பட அவரது கூட்டாளிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒரு பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளார். வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு கொலை வழக்கில் டிரைவர் ராஜேஷின் மகன் வேலூர் ஜெயிலில் இருந்தபோது அங்கிருந்த கைதிகளுடன் திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. பிடிப்பட்டவர்களின் பெயர் விவரத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. அவர்கள் ஸ்ரீபெரும்புதூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள்Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications