வினோதினியை ஆசிட் வீசி கொன்றவனுக்கு ஆயுள் தண்டனை!: காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பு

தீபாவளிப் பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ஆம் தேதி இரவு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த வினோதினி மீது சுரேஷ் என்பவர் ஆசிட் வீசினார்.
இந்த சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதே தினத்தில் மேல் சிகிச்சைக்காக வினோதினி சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார். தொடர் விசாரணைகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் 167 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் பிப்ரவரி 12-ஆம் தேதி வினோதினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், கொலை முயற்சி வழக்காக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை கொலை வழக்காக மாற்றி கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
ஏப்ரல் 29-ஆம் தேதி வினோதினி வழக்கு விசாரணை தொடங்கியது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே மே மாதம் 23-ஆம் தேதி ஜாமினில் வெளி வந்தார். அதனை தொடர்ந்து ஜூன் 10 முதல் 25-ஆம் தேதிகள் வரை 24 பேரிடம் அரசு தரப்பில் சாட்சியம் விசாரிக்கப்பட்டது.
ஜூலை 9-ஆம் தேதி சுரேஷிடம் நடந்த விசாரணையில் 115 கேள்விகள் நீதிபதி மூலம் கேட்கப்பட்டது. ஜூலை 17,22,25-ஆம் தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டது. ஜூலை 29-ஆம் தேதி இரு தரப்பு வாதங்களும் எழுத்து பூர்வமாக கொடுக்கப்பட்டது. கடந்த 12- ஆம் தேதி முழு விசாரனையும் முடிந்து தீர்ப்பு ஒத்துவைக்கப்பட்டது.
இந்த நிலையில், குற்றவாளிக்கு இன்று ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. காயப்படுத்துதல், கொடுங்காயம் ஏற்படுத்துதல் கொலை செய்தல் பிரிவுகளின் கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த நீதிமன்றம், ஒரு லட்சம் அபராதம் விதித்துள்ளது. அபராதத் தொகையில் ரூ.50 ஆயிரத்தை வினோதினி குடும்பத்துக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications