கைதிகள் உண்ணாவிரதம்: ‘சாப்பிடலைனா... ஊட்டி விடுங்க’: போலீசுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு
சாக்ரமெண்டோ: கலிபோர்னியாவில் சக கைதிகளுக்காக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் கைதிகளுக்கு வலுக்கட்டாயமாக உணவளிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலிபோர்னியாவில் குற்றம் செய்து சிறைத்தணடனை பெற்ற கைதிகள், சிறைக்குள் மீண்டும் தவறு செய்தால் அவர்களைத் தனிமைச் சிறையில் வைக்கும் வழக்கம் உள்ளது. அவ்வாறு தனிமைச்சிறையில் வைக்கப்பட்ட பலர் பத்தாண்டுகளுக்கும் மேலாக அக்கொடுமையான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்களாம்.
அத்தகைய கைதிகளை விடுவிக்கும் பொருட்டு கலிபோர்னியாவில் உள்ள சிறைக்கைதிகள் ஒன்றுபட்டு போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் கைதிகள்...
கலிபோர்னியாவில் மொத்தம் 1,33,000 கைதிகள் சிறைகளில் உள்ளனர். அவர்களில் சுமார் 30,000 கைதிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோசமான உடல்நிலை....
கடந்த ஆறு வாரங்களுக்கும் மேலாக இவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூலை 8ம் தேதி முதல் உண்ணாவிரதத்தை தொடங்கிய 45 கைதிகளின் நிலைமை படுமோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வற்புறுத்த தடை...
பொதுவாகத் தங்களை உயிர்பிழைக்க வைக்க வேண்டாம் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு இதுபோன்ற உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடும் கைதிகளுக்கு வற்புறுத்தி உணவளிப்பதை அம்மாநிலம் தடை செய்துள்ளது..

கட்டாய உணவு...
இந்நிலையில் ஸ்டீவன் தாரட் என்ற சிறைச்சாலை மருத்துவர் வாழ்வா, சாவா? என போராடும் இக்கைதிகளுக்கு எதிராக வழக்கு ஒன்று தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி தெல்டன் ஹெண்டர்சன், ‘ சாப்பிட மறுக்கும் கைதிகளுக்கு வர்புறுத்தி உணவளிக்கும் படி' அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

அதிரடி உத்தரவு....
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள், பிற கைதிகளையும் உண்ணாவிரதத்தில் ஈடுபட வைக்க முயற்சி செய்ததாலேயே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப் பட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications
