பள்ளிச் சிறுமிகளை அடைத்து வைத்து சீரழித்த கடாபி.. புதிய புத்தகத்தில் பரபரப்புத் தகவல்கள்
பாரீஸ்: லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி மும்மர் அல் கடாபி பள்ளிச் சிறுமிகளை எப்படியெல்லாம் தனது காமப் பசிக்கு இரையாக்கினார் என்பது குறித்த புதிய புத்தகம் ஒன்றில் பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அந்த சிறுமிகளை அவர் செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்றும், தனது கோட்டைக்குக் கீழே அறை அமைத்து அவர்களை அடைத்து வைத்து பாலியல் ரீதியாக அவர்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வந்ததாகவும் Gaddafi's Harem: The Story Of A Young Woman And The Abuses Of Power In Libya என்ற தலைப்பிலான அந்த நூல் கூறுகிறது.
பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் இதை எழுதியுள்ளார். இந்த நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த நூலில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்...

யாரங்கே.. அவர்களைக் கடத்தி வா
தனது கண்ணில் எந்த அழகான சிறுமி பட்டாலும் உடனே அவர்களைக் கடத்தி வருமாறு தனது பாடிகார்டுகளுக்கு உத்தரவிடுவாராம் கடாபி.

அடைத்து வைத்து சித்திரவதை
பின்னர் அந்த சிறுமிகள தனது கோட்டை போன்ற மாளிகையின் கீழே அமைக்கப்பட்டிருந்த ரகசிய அறைக்குக் கொண்டு போய் அடைக்க உத்தரவிடுவாராம். அங்கு வைத்துத்தான் பாலியல் ரீதியான சேஷ்டைகளை அவர் அரங்கேற்றுவாராம்.

சொராயாவின் சோகக் கதை
இப்படி கடத்தி வரப்பட்டு சித்திரவதைக்குள்ளான ஒரு சிறுமிதான் சொரயா. இவருக்கு அப்போது 15 வயதாகும். ஐந்து வருடங்கள் இவர் சீரழிந்துள்ளார்.

கொடூரமான கற்பழிப்பு
தான் கொடூரமாக கற்பழிக்ப்பட்டதாகவும், அடித்துத் துன்புறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார் சொரயா.

தினசரி பலாத்காரம்
தன்னை தினசரி கடாபி பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார் அவர். மேலும் கடாபி மட்டுமல்லாமல் அவரது பாடிகார்டுகளும் தன்னை இசைக்கு கட்டாயப்படுத்தி சீரழித்ததாகவும் இவர் கூறியுள்ளார்.

தூதர்களின் மனைவிகளையும் விட்டு வைக்காத கடாபி
பள்ளிச் சிறுமிகள் மட்டுமல்லாமல், வெளிநாட்டுத் தூதர்களின் மனைவிமார்கள், பிரபல பெண்மணிகள் என யாரையும் விட்டுவைக்கவில்லையாம் கடாபி.

பெண் பாடிகார்டுகளையும்
தனக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காக என்று கூறி தான் வைத்திருந்த பெண் பாடிகார்டுகளை செக்ஸ் அடிமை போலவே நடத்தி வந்தாராம் கடாபி. அவர்களில் பலருக்கு துப்பாக்கியைப் பிடிக்கவே தெரியாதாம்.

நிர்வாணமாக படுத்துக் கிடந்த கடாபி
சொரயாவை முதல் முறையாக தனது ரகசிய அறைக்குள் அழைத்து வர உத்தரவிட்டபோது கடாபி நிர்வாண நிலையில் படுக்கையில் இருந்தாராம். முதல் முயற்சியிலேயே அவர் கொடூரமாக நடந்து கொண்டாராம்.

பாடம் கற்பிக்க உத்தரவு
ஆனால் சொரயா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் அவருக்குப் பாடம் கற்பிக்க உத்தரவிட்டாராம் கடாபி. இதையடுத்து ஒரு பாடிகார்ட், சொரயாவை அழைத்துச் சென்றாராம்.

உட்கார வைத்து அட்வைஸ்
அந்த நபர் சொரயாவை தனக்கு அருகில் உட்கார வைத்து கடாபிக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பாடம் நடத்துவது போல சொன்னாராம்.

ஒரு லட்சம் பிரதிகள்
இந்த நூல் தற்போது 1 லட்சம் பிரதிகள் விற்றுள்ளதாம். ஆங்கிலத்திலும் இது மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளதாம். இதில் சொரயா போல பல சிறுமிகளின் கதையையும் கூறியுள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications