வதோத்ராவில் 2 கட்டிடங்கள் இடிந்தன... 6 பேர் பலி - 35 பேர் கதி என்ன?

Subscribe to Oneindia Tamil

வதோத்ரா: குஜராத் மாநிலம் வதோத்ராவில் 2 கட்டிடங்கள் சரிந்ததில் 6 பேர் பலியாகினர். 35 பேர் கதி இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

வதோத்ரா அர்பன் டெவலப்மென்ட் அதாரிட்டி உருவாக்கிய குடியிருப்புப் பகுதியில் அமைந்திருந்தன இந்த இரு கட்டடங்களும். மொத்தம் 56 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ள இந்தப் பகுதியில், இன்று காலை திடீரென இரு கட்டடங்கள் பெரும் சத்தத்துடன் சடசடவென சரிந்தன.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 35 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

2 building collapse killed 6 in Vadodara

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தனவா... வேறு காரணங்களா என்பது குறித்துப் போலீசார் விசாரிக்கின்றனர்.

மீட்புப் பணிகளை உடனடியாகத் தொடங்கியுள்ளது குஜராத் அரசு. இதுகுறித்து நரேந்திர மோடி தனது ட்விட்டரில், "வதோத்ராவில் 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக செய்தி வந்திருக்கிறது. மீட்புப் பணிகளை தொடங்கச் சொல்லியிருக்கிறேன். உடனடியாக அமைச்சர் நிதின்பாயை அனுப்பியுள்ளேன்," என குறிப்பிட்டுள்ளார்.

இடிந்து விழுந்த இரு கட்டிடங்களும் தலா 7 மாடிகள் கொண்டவை. 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+