கத்துன உங்க அப்பா, அம்மாவ என் ஆட்கள் சுட்டுடுவாங்க: சிறுமியை மிரட்டிய அசாரம் பாபு

Subscribe to Oneindia Tamil

Asaram Bapu told my daughter 'be quiet or my gunmen will kill your parents': Father
லக்னோ: சத்தம் போட்டால் ஆயுதம் ஏந்தி நிற்கும் தன்னுடைய ஆட்கள் உன் பெற்றோரை கொன்றுவிடுவார்கள் என்று அசாரம் பாபு மிரட்டியதாக அவர் மீது பாலியல் அத்துமீறல் புகார் கொடுத்த சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார்.

மத குருவான அசாரம் பாபு(72) மீது அவரது ஆசிரமத்தில் தங்கி படித்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பாபுவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் அவரோ தான் எந்த தவறும் செய்யவில்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் அந்த சிறுமியின் தந்தை கூறுகையில்,

அவர் கெட்ட சக்திகளை ஓட்டுகிறேன் என்று கூறி எனது மகளை அவரது ஜோத்பூர் அசிரமத்தில் உள்ள அவரது அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கு வைத்து அவர் என் மகளிடம் தகாத முறையில் நடந்துள்ளார். சத்தம் போட்டால் வெளியே ஆயுதம் ஏந்தி நிற்கும் எனது ஆட்கள் உன் பெற்றோரை சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்று மிரட்டியுள்ளார்.

அவருக்கு போலீஸ் தொடர்பு உள்ளது. அதனால் தான் புகார் கொடுத்து 2 வாரங்கள் கழித்து சம்மன் அனுப்பியுள்ளனர். அவரை இந்நேரம் கைது செய்திருக்க வேண்டும். பாபுவை தூக்கில் போட வேண்டும் என்றார்.

இந்நிலையில் அந்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அசாரம் பாபுவின் மகன் நாராயண் சாய் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+