சென்னை: பிச்சை எடுப்பதற்காக சாக்கு மூட்டையில் சிறுவன் கடத்தல்- வாலிபர் கைது
சென்னை: பிச்சையெடுக்க வைப்பதற்காக சிறுவனை சாக்கு மூட்டையில் கட்டித் தூக்கிச் சென்ற வாலிபர் கையும் களவுமாக பொதுமக்களிடம் பிடிபட்டார்.
பிச்சையெடுப்பதும் ஒரு தொழிலாக மாரி வரும் சூழ்நிலையில், பலர் குழந்தைகள், உடல் ஊனமுற்றவர்கள் மற்றும் முதியவர்களை இத்தொழிலில் ஈடுபடுத்தி காசு பார்க்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக குழந்தைகளைக் கடத்தவும் செய்கின்றனர்.
அந்தவகையில், சிறுவர்களைக் கடத்தி, அவர்களை பிச்சையெடுக்கவைத்து அதன் மூலம் லாபம் பார்த்து வந்த வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கியுள்ளார்.
கோயம்பேடு பகுதியில் வசித்து வரும் முகேஷ், சித்ரா தம்பதிகளின் 6 வயது மகன் ராகுல். நேற்று முந்தினம் தனது உறவினரைக் காண, அதே பகுதியில் உள்ள சேமாத்தம்மன் கோவில் தெருவிற்குச் சென்றார் சித்ரா. உடன் ராகுலும் சென்றிருந்தான். சித்ரா வீட்டிர்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, ராகுல் தெருவில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது அங்கு வந்த மர்ம வாலிபர், சிறுவன் முகேஷிர்கு இனிப்புகள் கொடுத்து அவனை இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். பின்னர் முகேஷை ஒரு சாக்குமூட்டைக்குள் அடைத்து தலையில் தூக்கிக் கொண்டு சென்றுள்ளான்.
தலையில் சாக்குமூட்டையுடன் ஓடும் வாலிபரை பார்த்து சந்தேகமடைந்த பொதுமக்கள் அவனை விரட்டிப் பிடித்தனர். மூட்டைக்குள் சிறுவன் இருந்ததைக் கண்டு அதிர்ந்த மக்கள் வாலிபரை போலீசில் ஒப்படைத்தனர். சிறுவன் அவனது பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டான்.
போலீசாரின் விசாரணையில் தாம்பரத்தைச் சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் தாமோதரன் என்பதும், இவ்வாறு குழந்தைகளைக் கடத்தி, பிச்சையெடுக்க வைப்பதே அவனது தொழில் என்பதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications