ஊருக்குப் போனதும் உல்லாசம்.. மனைவியின் கள்ளக்காதலனை சரமாரியாகத் தாக்கிய கணவர்

Subscribe to Oneindia Tamil

கோவை: வேலை நிமித்தமாக வெளியூருக்குப் போகும்போதெல்லாம் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்தார் மனைவி. ஆனால் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென கணவர் ஊரிலிருந்து திரும்பியபோது, கள்ளக்காதலனுடன் கையும் களவுமாக பிடிபட்டார். காணக் கூடாததைக் கண்டு கொதிப்படைந்த கணவர், மனைவியையும், கள்ளக்காதலனையும் சரமாரியாக தாக்கினார்.

படுகாயமடைந்த கள்ளக்காதலன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி தப்பி ஓடி விட்டார். தாக்கி விட்டுத் தப்பிய கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை ரத்தினபுரி வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ். 29 வயதாகும் இவர் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி. அடிக்கடி வேலைக்காக சென்னைக்குப் போய் விடுவார்.

இவரது மனைவி பெயர் ஆனந்தி. 23 வயதாகிறது. இவருக்கு ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் வேலைநிமித்தமாக அடிக்கடி கணவர் வெளியூர் போய் விடும் நிலையில், ஆனந்திக்கும், நல்லாம்பாளையத்தில் உள்ள முத்துக்குமார் என்பவருக்கும் இடையே கள்ள உறவு ஏற்பட்டது. தங்கராஜ் ஊருக்குக் கிளம்பியதுமே முத்துக்குமாருக்கு ஆனந்தி தகவல் அனுப்புவார். அவரும் கிளம்பி வந்து விடுவார். இருவரும் உல்லாசமாக இருப்பார்கள்.

அதேபோல சமீபத்தில் 3 நாட்கள் சென்னை செல்வதாக கூறி விட்டு போய் விட்டார் தங்கராஜ். ந்லலாம்பாளையத்துக்குப் போன் போனது. அவரும் கிளம்பி வந்தார்.

வந்தது முதலே இருவரும் வீடடை விட்டுக் கூட வெளியே வராமல் சந்தோஷத்தில் திளைத்திருந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவும் இருவரும் உல்லாசத்தில் மூழ்கியிருந்தனர். ஆனால் தங்கராஜ் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் நள்ளிரவில் வீட்டுக்கு வந்து நின்றார்.

கணவரை திடீரென எதிர்பாராத ஆனந்தி அதிர்ச்சி அடைந்தார். தப்பிச் செல்லவும் வழி இல்லை. எனவே வேறு வழியின்றிக் கதவைத் திறந்தார். அரைகுறை ஆடையுடன் மனைவியும், இன்னொரு ஆணும் வீட்டுக்குள் இருப்பதைப் பார்த்து கொதித்துப் போனார் தங்கராஜ்.

கடும் கோபமடைந்த அவர் முத்துக்குமாரை தலைமுடியைப் பிடித்து சரமாரியாக தாக்கினார். டிவி ரிமோட்டை எடுத்து வெறி வந்து தாக்கினார். ரிமோட்டை உடைத்து கத்தி போல பயன்படுத்தி குத்தினார். ஆனந்திக்கும் அடி விழுந்தது.

கணவரின் கோபாவேசத்தைப் பார்த்து பயந்து போன ஆனந்தி குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஓடி விட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதைத் தொடர்ந்து தங்கராஜும் ஓடி விட்டார். படுகாயமடைந்து கிடந்த முத்துக்குமாரை போலீஸாருக்குத் தகவல் அனுப்பி வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

முத்துக்குமாரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வெளியே ஓடிப் போன தங்கராஜை போலீஸார் கண்டுபிடித்துக் கைது செய்தனர். ஆனந்தி என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+