திருச்செந்தூர், விளாத்திகுளம்- கடல் தாது மணல் குடோன்களில் ஆய்வு
திருச்செந்தூர்: திருச்செந்தூர், விளாத்திக்குளம் பகுதிகளிலுள்ள தனியார் கடல்தாது மணல் குடோன்களில் கனிமவளத்துறை அதிகாரிகள் இன்று 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே பெரியதாழையில் கடல் தாதுமணல் ஏற்றி வந்த லாரியை மீனவமக்கள் சிறைபிடித்து வைத்து 3வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவி மினரல்ஸ், பி.எம்.சி உள்ளிட்ட கடல்தாது மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக வருவாய்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி தலைமையில் சிறப்பு ஆய்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்குழுவினர் கடந்த 12, 13, 14ம் தேதிகளில் முதல்கட்ட ஆய்வு நடத்தினர். தொடர்ந்து 19, 20ம் தேதிகளில் 2ம் கட்ட ஆய்வினை தொடர்ந்து முறைகேடுகள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாவட்டத்திலுள்ள அனைத்து கடல்தாது மணல் குவாரிகளிலும் மணல் எடுப்பதற்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் கடல்தாது மணல் நிறுவனங்களுக்கு சொந்தமான குடோன்களில் தமிழக கனிமவளத்துறை இயக்குநர் பழனிவேல் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முதல் சோதனை மேற்கொண்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆத்தூர் அருகேயுள்ள சேர்ந்தபூமங்கலம் மணல் குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து கனிமவளத்துறை அதிகாரிகள் குழுவினர் 2வது நாளாக திருச்செந்தூர், விளாத்திக்குளம் பகுதிகளிலுள்ள தனியார் கடல்தாது மணல் குடோன்களில் கனிமவளத்துறை இயக்குநர் பழனிவேல் தலைமையில் இன்று 2வது நாளாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, பெரியதாழையில் மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள கடல்தாது மணல் ஏற்றிய லாரியை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பெரியதாழை ஊர்கமிட்டி தலைவர் கன்பூசியஸ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் கொங்கன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் லாரியை விடுவிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் வந்து உறுதி அளித்தால் மட்டுமே லாரியை விடுவிப்போம் என்று மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாரியை சிறைபிடித்து மீனவமக்கள் தொடர்ந்து 3வது நாளாக போராட்டம் நடத்தி வரும் சம்பவம் திருச்செந்தூர், மணப்பாடு, பெரியதாழை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications