முருகமூர்த்திக்கு வந்த சோகம்... 3 மனைவிகளும் கைவிட்டதால் தற்கொலை!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் அடுத்தடுத்து 3 திருமணம் செய்தும், மூன்று பேருமே அவரை விட்டுப் பிரிந்து போனதால் மன வேதனை அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவை, பாப்பாயக்கன் பாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான முருகமூர்த்தி. இவருக்கு 2 முறை திருமணம் நடந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ, இரண்டு மனைவியரும் இவரை விட்டுப் போய் விட்டனர்.

இருந்தும் மனம் தளராத முருகமூர்த்தி, மூன்றாவதாக 27 வயதுப் பெண்ணை சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்தார். ஆனால் அந்த வாழ்க்கையிலும் விரிசல் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் 3வது மனைவி கடந்த வாரம் வீட்டை விட்டுப் போய் விட்டார். திரும்ப வரவே இல்லை. இதனால் முருகமூர்த்தி பெரும் சோகமடைந்தார்.

3 முறை திருமணம் செய்தும் மனைவிகள் நிலைக்கவில்லையே, தாம்பத்யம் சுவைக்கவில்லையே என்று வேதனை அடைந்த அவர் தூக்குப் போட்டுக் கொண்டு உயிரை விட்டு விட்டார்.

தாம்பத்ய வாழ்க்கைக்கு முருகமூ்ர்த்தி பொருத்தமற்றவராக இருந்ததால்தான் அவரை விட்டு மூன்று மனைவியருமே பிரிந்து போய் விட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+