For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்டர்நெட்… மன அழுத்தம் தரும்!: அது போதையும் கூட!.. ஆய்வில் அதிர்ச்சி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

லண்டன்: இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கு மன அழுத்தமும் அதிகமாகும் என்று ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ள நிலையில் சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நெட் சென்டருக்கு போய் இணையதளங்களை உபயோகித்தவர்கள் இன்றைக்கு உள்ளங்கைகளில் மொபைல் போன் மூலம் இணையத்தை உபயோகிக்கின்றனர்.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் மூழ்குவதோடு, மெயில், சாட்டிங் என பலவிதங்களில் இணையத்தை உபயோகிக்கின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ஆயிரம் பேரிடம் சமீபத்தில் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்தன.

வாழ்க்கையே விரக்தி

வாழ்க்கையே விரக்தி

ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், பலருக்கும் பதைபதைப்பு ஏற்படுகிறது என்றும் அதனால் வாழ்க்கையே விரக்தியாகி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

ஒரு வித பதற்றம்

ஒரு வித பதற்றம்

இண்டர்நெட் இல்லாவிட்டால் மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர்.

வலைதளத்தில் சிக்கியவர்கள்

வலைதளத்தில் சிக்கியவர்கள்

இன்டர்நெட் இணைப்பு இல்லை என்றால், ஒருவர், அது என் ஒரு கையை வெட்டியது போல இருக்கும் என்றார். இவர்களில் பெரும்பாலானவர்கள் பேஸ்புக், ட்விட்டர், மெயில் ஆகியனவற்றின் தொடர்பு கிடைக்காமல் போவதே இந்த மனநிலைக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

நெட் போதை

நெட் போதை

சிகரெட்டுக்கு எப்படி, அதனைப் பயன்படுத்துபவர்கள் அடிமையாகிறார்களோ, அதே போலத்தான் இன்டர்நெட்டுக்கும் என கருத்து தெரிவித்துள்ளனர்.

இரவில் அப்டேட்

இரவில் அப்டேட்

இரவு படுக்கப் போகும்போது பேஸ்புக், ட்விட்டர் அப்டேட் செய்து படுக்கைக்குச் செல்வதைப் பழக்கமாகப் பலர் கொண்டுள்ளனர். எனவே இது தடை படுக்கையில், தூக்கம் வராமல் தவிக்கின்றனர்.

ஆஹா விடுதலை

ஆஹா விடுதலை

ஆனால், இந்த கணக்கெடுப்பில் 21% பேர், இன்டர்நெட் இல்லை என்றால் பிரச்சினையில்லை சுதந்திரமாக இருப்பேன் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

பிரிட்டனில் உள்ள லீஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சியாளர் காத்ரியோனா மோரிசன் என்பவர் மேற்கொண்ட ஆய்வில் மன அழுத்தத்துக்கும் இன்டர்நெட்டில் அதிக நேரம் செலவழிப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மூழ்கிய மக்கள்

மூழ்கிய மக்கள்

16 வயதிலிருந்து 51 வயது வரை உள்ள 1319 பேரிடம் மேற்கொண்ட ஆய்வில், தினசரி, தாங்கள் வாங்கிய பொருட்களுக்குக் கட்டணம் கட்டுவதிலிருந்து பொழுதுபோக்கிற்காக விளையாடுவது வரை இன்டர்நெட்டில் எவ்வளவு நேரம் செலவழிக்கின்றோம் என்பதே தெரியாமல் இருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இதுவே மனஅழுத்தம் ஏற்பட காரணமாகிறது.

English summary
There is a strong link between heavy internet use and depression, UK psychologists have said.The study, reported in the journal Psychopathology, found 1.2% of people surveyed were "internet addicts", and many of these were depressed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X