For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூட்டம் கூட்டமாக அகதிகளாக வெளியேறும் உ.பி. முசாபர்நகர் மக்கள்!!

By Mathi
Google Oneindia Tamil News

முசாபர்நகர்: ஒரு ஈவ் டீசிங் விவகாரம் உத்தரப்பிரதேசத்தை மட்டுமல்ல.. இந்தியாவின் பல மாநிலங்களையும் பலியெடுக்கப் போகிறது என்று எச்சரிக்கும் அளவுக்கு விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இதனால் முசாபர்நகர் மாவட்டத்தில் இருந்து இருபிரிவு மக்களுமே கூட்டம் கூட்டமாக அகதிகளாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் ஒரு இளம்பெண்ணை ஈவ் டீசிங் செய்த விவகாரம் குடும்பங்களுக்கு இடையேயான மோதலாகி கொலையில் முடிந்தது. மூன்று பேர் கொலையானது 32 பேரை பலி கொண்ட இருபிரிவு மோதலாகி வெடித்துள்ளது.

இதனால் முசாபர்நகர் மாவட்டத்தில் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அகதிககளாக பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் மாவட்டத்தின் பல கிராமங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன

ஜூல்லா கிராமத்தில்..

ஜூல்லா கிராமத்தில்..

முசாபர்நகர் மாவட்டத்தில் ஜூல்லா கிராமத்தில் அகதிகளாக இடம்பெயர்ந்து செல்லக் காத்திருக்கும் ஒரு பிரிவு மக்கள்..

ஊரடங்கு உத்தரவு..

ஊரடங்கு உத்தரவு..

முசாபர் நகரில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடி கிடக்கும் வீதிகள்...

ஊரடங்குக்கு நடுவே கிரிக்கெட்

ஊரடங்குக்கு நடுவே கிரிக்கெட்

முசாபர்நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் வெறிச்சோடிய வீதிகளில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள்

அகதிகளாக..

அகதிகளாக..

முசாபர்நகரில் தொடரும் ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து கிராமம் கிராமமாக அகதிகளாக வெளியேறும் பொதுமக்கள்.

இந்த குழந்தை செய்த பாவம் என்ன?

இந்த குழந்தை செய்த பாவம் என்ன?

முசாபர்நகர் வன்முறைத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றும் பச்சிளம் குழந்தை..

அமைச்சர் அஜித்சிங்குக்கு தடை

அமைச்சர் அஜித்சிங்குக்கு தடை

முசாபர்நகர் மாவட்ட வன்முறை பாதித்த பார்வையிட வந்த ராஷ்டிரிய லோக் தள் தலைவர் அஜித்சிங்கை தடுத்து நிறுத்தும் போலீசார்..

பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தும் மறிப்பு

பாஜகவின் ரவிசங்கர் பிரசாத்தும் மறிப்பு

முசாபர்நகரில் உண்மை நிலவரத்தை அறிய நேரில் சென்ற பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத்தை அனுமதிக்க மறுக்கும் போலீசார்..

English summary
A haze of smoke and flames above the village of Phugana signals a distress call that went ignored. Early on Sunday morning, communal violence snaked through the conglomerate of narrow, dusty streets. In this village, a two-hour drive from Muzaffarnagar, Homes are empty, shops destroyed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X