For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விநாயகர் சதுர்த்தி உற்சாகம்.. லட்டு கார் விநாயகர், பாக்கு விநாயகர், காய்கறி விநாயகர்...

By Siva
Google Oneindia Tamil News

பெங்களூர்: விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் விநாயகர் சிலைகளை வாங்கி அதை அழகுபடுத்தினர். ஆண்டுதோறும் வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்யப்படும். இந்த ஆண்டும் பல்வேறு வித்தியாசமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டன.

உயரமான விநாயகர் சிலைகள் முதல் பாக்கால் செய்யப்பட்ட சிலைகள் வரை வழிபாட்டுக்கு வைக்கப்பட்டன.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் மிக உயரமான விநாயகர் சிலையை செய்து வைத்துள்ளனர். பிற சிலைகள் எல்லாம் ஆற்றில் கரைக்கப்பட்ட பிறகு இறுதியாக இந்த சிலையை கரைக்கவிருக்கின்றனர்.

குஜராத்

குஜராத்

விநாயகர் சதுர்த்தி அன்று குஜராத் மாநிலத்தில் 23 புதிய தாலுகாக்கள் உருவாக்கப்பட்டுள்ளது குறித்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார்.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் உள்ள அல்சூர் ஏரியில் கரைக்க விநாயகர் சிலைகளை தூக்கிச் சென்ற பக்தர்கள்.

பாட்டியாலா

பாட்டியாலா

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ராணுவ வீரர்கள்.

அகமதாபாத்

அகமதாபாத்

அகமதாபாத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

மும்பை

மும்பை

மும்பையில் விநாயகர் சிலையை பந்தலுக்கு தூக்கிச் செல்லும் பக்தர்கள்.

நல்லிணக்கம்

நல்லிணக்கம்

மும்பையில் இந்துக்களும், முஸ்லிம்களும் சேர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேசம்

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மொராதாபாத்தில் காய்கறிகளை வைத்து விநாயகர் சிலை செய்த பள்ளி மாணவ, மாணவியர்.

சென்னை

சென்னை

சென்னையில் கிரேன் மூலம் பெரிய விநாயகர் சிலையை தூக்கிச் செல்லும் நபர்கள்.

எரிபொருள்

எரிபொருள்

எரிபொருள் விலை உயர்வை குறிக்கும் வகையில் விநாயகர் சைக்கிளுடனும், எலி பைக்கிலும் செல்வது போன்று ஒரு கலைஞர் சிலையை செய்து அகமதாபாத்தில் வைத்தார்.

ஒடிஷா

ஒடிஷா

ஒடிஷா மாநிலத்தின் பூரியில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் செய்த விநாயகர் சிற்பத்தை பார்வையிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.

லட்டு கார்

லட்டு கார்

சுதாகர் என்பவர் விநாயகர் லட்டின் மேல் அமர்ந்திருப்பது போன்று ஒரு காரை வடிவமைத்து அதை மக்களின் பார்வைக்காக ஹைதராபாத்தில் வைத்தார்.

அட்டை விநாயகர்

அட்டை விநாயகர்

மும்பையில் அட்டைகளைக் கொண்டு விநாயகர் சிலை செய்த பள்ளி மாணவ, மாணவியர்.

ஜோத்பூர்

ஜோத்பூர்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 25 கிலோ பாக்கை வைத்து செய்யப்பட்ட விநாயகர் சிலை.

ஜெய்பூர்

ஜெய்பூர்

ஜெய்பூரில் விநாயகர் சிலைக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள லட்டுகள்.

English summary
Vinyagar Chathurthi festival was celebrated all over the nation in a grand manner on monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X