இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ளக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்தமாதம் இலங்கைப் பயணம் மேற்கொண்ட நவநீதம் பிள்ளை அதற்குப் பிறகு ஐநாவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை உட்பட 20 நாடுகளின் மனித உரிமை விவரங்கள் பற்றி அவர் ஜ.நா மனித உரிமை ஆணையத்தின் 24-வது கூட்டத்தில் உரையாற்றுகையில், இலங்கையின் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நான் சந்தித்துப் பேசிய சமூகத்தினர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள், அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்களிலிருந்து அவர்களைக் காப்பாற்ற வேண்டியது மிகவும் அவசியம்'' என்றார்.

Navi Pillay warns Lanka for reprisals against rights defenders

மேலும் இலங்கைப் பயணத்தின்போது, போருக்குப் பிந்தைய மறுக்கட்டமைப்புப் பணிகள், மத சகிப்புத்தன்மை, அரசின் செயல்முறைகள், சட்ட அமலாக்கம் போன்றவற்றை ஆய்வு செய்ய போதிய வசதிகள் செய்து கொடுத்ததற்காக இலங்கை அரசுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

முன்னதாக தனது இலங்கைப் பயணம் முடியும் சமயத்திலும் இலங்கை அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளைப் பற்றிய தனது கவலையை நவநீதம் பிள்ளை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், நவநீதம் பிள்ளை ஆதாரங்களை அளித்தால் இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதாக இலங்கை அரசு பதிலளித்திருந்தது.

இதுமட்டுமின்றி, இலங்கை ஒரு சர்வாதிகார நாடாக மாறிவருகிறது என்றும் நவநீதம் பிள்ளை குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+