தமிழீழமே தீர்வு- சுதர்சன நாச்சியப்பன்! இலங்கையை பிரிக்கக் கூடாது- நாராயணசாமி!!

சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு பகுதி தமிழர்களின் தாயகம். சுதந்திர தமிழீழம் என்பது அனைவரது கனவு. அந்த கனவு நிறைவேற வேண்டுமெனில் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமியோ, இலங்கைக்கு போர்க்கப்பல்கள் வழங்குவது குறித்த ஒப்பந்தம் பல ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. அந்த போர்க்கப்பல்களை தமிழருக்கு எதிராக பயன்படுத்தக் கூடாது என இலங்கைக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி ஈழத் தமிழருக்கு எதிராக அந்த போர்க் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டால் அது குறித்து பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தெரிவிப்போம்.
சிங்களரும் தமிழரும் இலங்கை அரசியலமைப்புக்கு தமிழர்களும் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். இலங்கையைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் காங்கிரஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை. எங்களைப் பொறுத்தவரை ராஜீவ்- ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.
மத்திய அரசின் இரண்டு இணை அமைச்சர்களும் ஈழத்க் தமிழர் பிரச்சனையில் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்திருப்பது காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications