கருணாநிதி மீது ஜெயலலிதா புதிய அவதூறு வழக்கு!
சென்னை: முரசொலியில் செய்தி வெளியிட்ட தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் இன்று அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முரசொலி நாளிதழில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி அவதூறாக செய்தி வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தி, தமிழக அரசுக்கும், முதல்வர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. இதனால், கருணாநிதி, செய்தி வெளியிட்ட முரசொலி ஆசிரியர் ஆகியோர் மீது அவதூறு வழக்கின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ஏற்கனவே கருணாநிதி மீது நான்கு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
அமைச்சர்கள் வழக்கு
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி முரசொலியில் வெளிவந்த கேள்வி பதிலில் அமைச்சரின் உறவினர்கள் மூலம் பைல்கள் கிளியர் செய்வது நடக்கிறது என்று கூறப்பட்டு இருந்தது. இதையடுத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தனித்தனியே திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முரசொலி செல்வம் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
விஸ்வரூபம் வழக்கு
இதேபோல், 'விஸ்வரூபம்' படம் தொடர்பான பிரச்னை குறித்து கலைஞர் கடிதத்தில் 'வெளியே வந்துவிட்டது பூனைக்குட்டி' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளிவந்தது. இது முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கருணாநிதி, முரசொலி செல்வம் மீது மாநகர அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இதேபோல், 'விஸ்வரூபம்' தொடர்பாக இந்து நாளிதழில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் கருணாநிதி மற்றும் இந்து ஆசிரியர், பதிப்பாளர் ஆகியோர் மீதும் முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த 4 வழக்குகளும் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது 5 வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications