ரீவைண்ட் 2021.. உங்களை திரும்பி பார்க்க வைத்த நிகழ்வுகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2021ம் ஆண்டு பலருக்கும் இனிமையான நினைவுகளை தந்திருக்கும், சிலருக்கு கடினமான வருடமாக இருந்திருக்கும், சிலருக்கு எப்போ அடுத்த வருடம் பிறக்கும் என்ற மனநிலை கூட வந்திருக்கும். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு, அனுபவங்கள் மலர்ந்திருக்கும்.
இதோ 2021ம் ஆண்டு எப்படி இருந்தது என்ற ஒரு பார்வையை, உங்களுக்காக முன் வைக்கிறோம்.

ஜனவரி முதல் டிசம்பவர் வரை, உங்களை ஏதாவது ஒரு வகையில் திரும்பி பார்க்க வைத்த அந்த லிஸ்ட் இதோ:
December 2021
- Dec 04
மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா காலமானார்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா (வயது 67) டிசம்பர் 4-ந் தேதி தனியார் மருத்துவமனையில் காலமானதாக அவரது மகள் மல்லிகா துவா சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். முன்னதாக வினோத் துவாவின் மனைவி கதிரியக்க துறை வல்லுநர் பத்மாவதி கடந்த ஜூன் மாதம் கொரோனாவால் உயிரிழந்தார். தூர்தர்ஷன், என்.டி.டி.வியில் மிக முக்கிய பங்காற்றியவர் வினோத் துவா
November 2021
- கேதார்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடிஉத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் 12 அடி உயர ஆதி சங்கராச்சாரியார் சிலையை நவம்பர் 5-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது ஆதி சங்கரர் சிலை முன்பாக அமர்ந்து சிறிது நேரம் பிரதமர் மோடிதியானம் மேற்கொண்டார். 2013-ம் ஆண்டு உத்தரகாண்ட் பெருவெள்ளத்தின் போது ஆதிசங்கரர் சமாதி சேதமடைந்தது. ஆதி சங்கரரின் தத்துவங்களும் போதனைகளும் தற்போதைய காலத்துக்கு மிக முக்கியமானவை என்றார் பிரதமர் மோடிNov 05
October 2021
- Oct 02
போதைப் பொருள்- ஷாருக்கான் மகன் ஆரியன்கான் உள்ளிட்ட 7 பேர் கைதுபாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். மும்பையில் சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அக்டோபர் 2-ல் ஆரியன் கான் கைது செய்யப்பட்டார். அவருடன் முன்முன் தமேச்சா, அர்பாஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதைப் பொருட்கள் தடுப்பு சட்டத்தின் 8 (c), 20 (b), 27, 35 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
September 2021
-
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா பூபேந்தர் படேல் பதவியேற்புகுஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி பதவி விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக பூபேந்தர் படேல் பதவியேற்றார். செப்டம்பர் 12 அன்று விஜய் ரூபானிக்கு பதிலாக பூபேந்திர படேல் குஜராத்தின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். படேல் 2017 குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் கட்லோடியா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றார். சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ பெற்ற இவர், 2012 தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் முதல்வர் ஆனந்திபென் படேலுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார்.Sep 11 - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி காலமானார்ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் செப்டம்பர் 1ல் காலமானார். அவ்ருக்கு வயது 92. வடக்கு காஷ்மீரில் சோபோர் பாரமுல்லாவில் 1929-ம் ஆண்டு செப்டம்பர் 29-ல் பிறந்தவர் சையது அலி ஷா கிலானி. ஜம்மு காஷ்மீர் தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தியவர் கிலானி /ஜமாத்- இ- இஸ்லாமி காஷ்மீர் அமைப்பின் உறுப்பினராக இருந்த கிலானி, தெஹ்ரிக்-இ- குரியத் இயக்கத்தை உருவாக்கினார். ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களின் கூட்டமைப்பான அனைத்து குரியத் மாநாடு-ன் தலைவராகவும் கிலானி இருந்தார்.Sep 01
August 2021
- Aug 28இந்தியாவில் வாகன பதிவு முறையில் பிஎச் முறை அறிமுகம்அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் இனி புதிதாக வாங்கும் வாகனங்களுடன் மாநிலம் விட்டு மாநிலம் இடம் செல்ல நேரிடும் போது மறுபதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பாரத் சீரிஸ் எனும் புதிய பதிவு நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சீரிஸில் வாகனங்களை பதிவு செய்ய சாலை வரி செலுத்த வேண்டும். இது முழுக்க முழுக்க ஆன்லைனில் பதிவு செய்யப்படும்.
- Aug 21
உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் காலமானார்உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் உடல்நிலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 89. இவர் ராஜஸ்தான் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர். 1932 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி பிறந்த கல்யாண் சிங், 1967 ஆம் ஆண்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். இதையடுத்து பல முறை சட்டசபை தேர்தலில் இவர் வென்றுள்ளார். பாஜகவில் பல முக்கிய பதவிகளை பெற்றுள்ளார். - Aug 10127 ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியதுஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதிகாரம் அளிக்கும் 127 ஆவது சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா 385 உறுப்பினர்களுடன் நிறைவேற்றப்பட்டது. எந்த உறுப்பினரும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு சொல்லவில்லை. கடந்த 2018-ல் அரசியலமைப்பு சட்டத்தின் 102-வது திருத்தத்தின் மூலம், 338 பி பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையத்தின் கட்டமைப்பு, கடமைகள் மற்றும் அதிகாரங்களை கையாள்கிறது. மேலும் 342ஏ ஒரு குறிப்பிட்ட ஜாதியை சமூக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அறிவிக்கும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களை கையாள்கிறது.
- Aug 07
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை பெற்றார். 87.58 மீட்டர் தூரத்திற்கு இவர் ஈட்டியை எறிந்ததால் இவருக்கு தங்கம் கிடைத்தது. அபினவ் பிந்த்ராவுக்கு பிறகு தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் நீரஜ் சோப்ரா ஆவார். - Aug 06ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது, இனி மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என பெயர் மாற்றம்இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது. இந்த நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணியினரின் சூப்பரான செயல்பாட்டால் ஹாக்கி வீரர் தயான் சந்த்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பல குடிமகன்கள் இந்த பெயரில் விருது வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டதற்கிணங்க தயான் சந்த் கேல் ரத்னா விருது என பெயரிடப்பட்டுள்ளது.
- Aug 05
20 ஆண்டுகளுக்கு ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள்ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகள் கழித்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதிபர் அஷ்ரப் கானியை வெளியேற்றிவிட்டு ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். இதையடுத்து முல்லா முகமது ஹாசன் அக்குந்த் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அமைச்சரவையில் பெண்களுக்கு இடமில்லை. இதில் தீவிரவாத இயக்கத் தலைவர் சிராஜுதீன் ஹக்கானி இடம்பெற்றிருந்தார். - Aug 04
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டையில் இந்திய வீரர் லோவினா போர்கோஹைனிற்கு வெண்கலம்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய குத்துச் சண்டை வீரர் (69 கிலோ எடைப் பிரிவு) லோவினா போர்கோஹைனுக்கு வெண்கலம் கிடைத்தது. இவர் உலக சாம்பியனான புஸினாஸ் சர்மேனேலியை 0- 5 என்ற கணக்கில் வென்றுள்ளார். துருக்கி நாட்டை சேர்ந்த வீராங்கனை தங்கம் வென்றார். லோவினாவின் வெற்றியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். - Aug 01
டோக்கியோவில் ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பிவி சிந்துவுக்கு வெண்கலம்ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் 2020 போட்டியில் மகளிர் ஒற்றையர் பாட்மிண்டனில் இந்திய வீராங்கனை பிவி சிந்து வெண்கலப் பத்தகம் வென்றார். இவர் சீன வீராங்கனை ஹீ பிங் ஜியாவோவை 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வென்றார். ஏற்கெனவே 2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக இரு பதக்கங்களை வென்றோரின் பட்டியலில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு அடுத்த பிவி சிந்து இடம்பெற்றுள்ளார். இவர் காமன்வெல்த், ஆசிய போட்டிகள், உலக இறுதிச் சுற்றுகளில் கடந்த 5 ஆண்டுகளாக பதக்கங்களுடன் தாயகம் திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
July 2021
-
எடியூரப்பா ராஜினாமா.. கர்நாடகத்தின் புதிய முதல்வரானார் பசவராஜ் பொம்மைகர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுககு 78 வயது ஆகிவிட்டதால் கட்சி உத்தரவை ஏற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அவருக்கு பதிலாக கர்நாடகா முதல்வராக பசவராஜ பொம்மை தேருவ செய்யப்பட்டார். இவர் எடியூரப்பா அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர். முதல்வர் பதவிககான ரேஸில் முன்னணியில் இருந்தவர்.Jul 28 - இந்தி மொழி தினசரி நாளேடான தைனிக் பாஸ்கர் நிறுவனத்தில் வருமான வரி சோதனைவரி ஏய்ப்பு செய்ததாக இந்தி மொழியின் தினசரி நாளிதழான தைனிக் பாஸ்கர் நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் அந்த நிறுவனங்களுக்குச் சொந்தமான வீடுகள், அலுவலகங்கள் உள்பட 32 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையின் முடிவில் தைனிக் பாஸ்கர் நிறுவனம், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக ரூ 700 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக தெரிவித்தனர்.Jul 22
- புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் தாக்குதலால் பலிபுலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக் கலைஞர் டேனிஷ் சித்திக் தலிபான்களால் கொல்லப்பட்டார். போல்டாக் மாவட்டத்தில் கந்தஹார் நகரில் ஆப்கான் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடந்த சண்டையை படம் பிடித்த போது சித்திக் கொல்லப்பட்டார். ரோஹின்யா பிரச்சினையை நன்றாக படம் பிடித்ததற்காக 2018ஆம் ஆண்டு சித்திக் புலிட்சர் விருதை பெற்றார். ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா ஆகிய நாடுகளில் நடந்த முக்கிய நிகழ்வுகள், ஹாங்காங் போராட்டங்களையும் அவர் படம் பிடித்துள்ளார்.Jul 16
- மத்திய அமைச்சரவையை மாற்றினார் பிரதமர் நரேந்திர மோடிபிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சரவையில் மாற்றங்களை கொண்டு வந்தார். டாக்டர் ஹர்ஷவர்தன், ரவி சங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர், பிரகாஷ் போக்ரியால் நிஷாங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர். ஹர்ஷ வர்தனிடம் இருந்த சுகாதாரத் துறை மன்சுக் மாண்டவியாவிடம் கொடுக்கப்பட்டது. கொரோனா உச்சத்தில் இருந்த நிலையில் இந்த மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. அது போல் காங்கிரஸில் இருந்து கட்சி தாவிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. மோடி அமைச்சரவையிலிருந்து 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். புதிதாக 43 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர்.Jul 07
-
கத்தோலிக்க பாதிரியாரும் பழங்குடியின உரிமை ஆர்வலருமான ஸ்டான் சுவாமி காலமானார்ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஆசிவாசி இன மக்களின் உரிமைகள், வளர்ச்சி, நலன்களுக்காக ஓய்வின்றி பாடுபட்டவர் ஸ்டான் சுவாமி. இவர் கத்தோலிக்க பாதிரியாராகவும் இருந்தார். புற்றுநோயாளியான இவர் பார்கின்சஸ் நோயாலும் அவதிப்பட்டு வந்தார். இவருக்கு எல்கர்- பரிஷட் மாவோயிஸ்ட் இயக்கத்தினருடன் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ராஞ்சியில் கடந்த 2020 அக்டோபர் 8ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவர் காலமானார்.Jul 05 -
உத்தரகண்ட் மாநிலத்தில் 11ஆவது முதல்வராக புஷ்கர் சிங் தமி பொறுப்பேற்புஉத்தரகாண்ட் மாநிலத்தின் 11 ஆவது முதல்வராக கடந்த ஜூலை மாதம் புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார். 4 மாதங்களில் 3ஆவது முறையாக முதல்வர் மாற்றப்பட்டுள்ளார். கட்டிமா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் புஷ்கர் சிங் தாமி (45) இளம் வயதில் முதல்வராகியுள்ளார். இதுவரை உத்தரகாண்ட் மாநில அரசில் ஒரு முறை கூட அமைச்சராக இருந்ததில்லை.Jul 04
June 2021
- Jun 18பறக்கும் சீக்கியர் மில்கா சிங் காலமானார்பறக்கும் சீக்கியர் என அழைக்கப்பட்ட இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் மில்கா சிங் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவருக்கு வயது 91. 1958 காமல்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்ற தந்தவர் மில்காசிங். 1960-ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்தார் மில்கா சிங். அப்போது 400 மீட்டர் தூரத்தை 45.6 வினாடிகளில் மில்கா சிங் ஓடியதே 1998 வரை தேசிய சாதனையாக இருந்தது. 1956, 1964-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் பங்கேற்றார். 1959-ல் பத்மஸ்ரீவீருது மில்கா சிங்குக்கு வழங்கப்பட்டது.
May 2021
-
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான மெகா தடுப்பூசி திட்டம் தொடக்கம்கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் மெகா திட்டத்தை மே 1 முதல் மத்திய அரசு தொட்ங்கியது. மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கவும் மத்திய அரசு அனுமதித்தது.May 01
April 2021
- Apr 01குஜராத்தில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்குஜராத் மாநிலத்தில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்தது. பாஜக ஆளும் உ.பி, ம.பியைத் தொடர்ந்து 3-வது மாநிலமாக குஜராத்தில் இச்சட்டம் அமலுக்கு வந்தது. கட்டாய மதமாற்றம் செய்தால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனையும் ரூ2 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். கட்டாய மதமாற்றத்தால் பாதிக்கப்படும் நபர் பெண், தலித் அல்லது பழங்குடியினராக இருந்தால் மதமாற்றம் செய்த நபருக்கு 4 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ3 லட்சத்துக்கு குறைவில்லாத அபராதமும் விதிக்கப்பட்ம். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு குறையாத 10 ஆண்டுகள் வரையிலான தண்டனை விதிக்கப்படும் என்கிறது இச்சட்டம்
February 2021
- அகமதாபாத்தின் மொடேரா புதுப்பிக்கப்பட்டு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது.அகமதாபாத்தின் மொடேரா புதுப்பிக்கப்பட்டு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஆகும். உலக அளவில் இந்த மைதானம் பெரிய அளவில் கவனம் பெற்றது.Feb 24
- ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபாலே தேர்வுஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளராக தத்தாத்ரேயா ஹோசபாலே நிர்வாகிகள் மூலம் மார்ச் 20ம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.Feb 20
- உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் மிகப்பெரிய பனிப்பாறை வெடித்ததுஉத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் மிகப்பெரிய பனிப்பாறை வெடித்தது. 7 பிப்ரவரி 2021 அன்று உருகி விழுந்த காரணத்தால், பனிப்பாறைகள் தௌலிகங்கா மற்றும் அலக்நந்தா ஆகிய இரண்டு ஆறுகளில் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டது.Feb 07
January 2021
- Jan 26
விவசாயிகள் போராட்டம் பெரிய அளவில் கலவரமாக மாறியது. குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் பெரிய அளவில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.விவசாயிகள் போராட்டம் பெரிய அளவில் கலவரமாக மாறியது. இந்த போராட்டம் தேசிய அளவில் மட்டுமின்றி உலக அளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் பெரிய அளவில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.விவசாய சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. - Jan 21
புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பலியாகினர்புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆய்வகத்தில் ஏற்பட்ட தீ விபத்து மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இங்குதான் இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சின் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர். - Jan 20
அமெரிக்காவின் 45வது அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்றார்.அமெரிக்காவின் 45வது அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்றார். அமெரிக்க அதிபராக இருந்த குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப் தோல்வி அடைந்த நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பிடன் தேர்தலில் வென்று அதிபர் ஆனார். - Jan 19ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய ஆடவர் அணி வென்றது.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய ஆடவர் அணி வென்றது. அதிலும் கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி வாகை சூடியது.
- Jan 16இந்தியாவில் கொரோனா வேக்சின் திட்டம் தொடங்கப்பட்டது.இந்தியாவில் கொரோனா வேக்சின் திட்டம் தொடங்கப்பட்டது. முதலில் வயதானவர்களுக்கு அளிக்கப்பட்ட வேக்சின் பின் படிப்படியாக வயது அடிப்படையில் வழங்கப்பட்டது. தற்போது 140 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
- Jan 04
ஆக்ஸ்போர்ட் ஆஸ்டர் செனெகாவின் முதல் டோஸ் வேக்சின் மக்களுக்கு போடப்பட்டதுஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மூலம் ஆராய்ச்சி செய்யப்பட்டு ஆஸ்டர் செனெகா நிறுவனம் மூலம் இந்த வேக்சின் விநியோகம் செய்யப்பட்டது. இதன் முதல் டோஸ் வேக்சின் ஜனவரி 4ம் தேதி மக்களுக்கு போடப்பட்டது - Jan 01ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியாஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் எட்டாவது முறையாக ஜனவரி 1-ல் இந்தியா தற்காலிக உறுப்பினரானது. இந்த பதவிக் காலம் 2 ஆண்டுகளாகும். இந்தியாவுடன் நார்வே, கென்யா, அயர்லாந்து, மெக்க்சிகோவும் தற்காலிக உறுப்பினராக பாதுகாப்பு கவுன்சிலில் இணைந்தன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகியவை நிரந்தர உறுப்பினர் நாடுகளாக இருக்கின்றன.
- Jan 01முன்னாள் உள்துறை அமைச்சர் புட்டா சிங் காலமானார்காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான பூட்டா சிங் காலமானார். இவருக்கு வயது 86. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
More From
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications