இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய "தியாகி".. நெகிழ்ச்சி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

நொய்டா: 6 வயதில் உயிரை இழந்த குழந்தையின் உடல் பாகங்களை குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளனர்.

நொய்டாவில் நடைபெற்ற இந்த சம்பவம் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 6 வயது நிரம்பிய அந்த குழந்தையின் பெயர் ரோலி பிரஜபதி.

கடந்த ஏப்ரல் 27ம் தேதி மர்ம நபர்களால் ரோலி பிரஜபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

குழந்தை

குழந்தை

இவர் வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் நெத்தியில் சுட்டதில் ரோலி பிரஜபதி கொலை செய்யப்பட்டார். இந்த துப்பாக்கி சூடு நடந்த உடனே ரோலி பிரஜபதியை அவரின் பெற்றோர்கள் ஹர்நாராயன் - பூனம் தேவி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவருக்கு கோமா ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அந்த குழந்தையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனை

மருத்துவமனை

அங்கு சீனியர் மருத்துவர் தீபக் குப்தா, ரோலி பிரஜபதி பரிசோதனை செய்தார். இதில் அந்த குழந்தையின் மூளை கடுமையாக சேதம் அடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு குழந்தையின் உடலை காப்பதற்காக மருத்துவர்கள் கடுமையாக முயற்சி செய்தனர். 3-4 மணி நேரங்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குழந்தையின் மூளை மொத்தமாக சேதம் அடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மூளை சாவு

மூளை சாவு

இதையடுத்து குழந்தைக்கு மூளை சாவு ஏற்பட்டுவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குழந்தையின் இதயம் மட்டும் துடித்துக்கொண்டு இருந்தது. இதையடுத்து குழந்தையின் பெற்றோரிடம், ரோலி பிரஜபதியின் உடல் பாகங்களை தானம் செய்வது தொடர்பாக மருத்துவர்கள் பேசி உள்ளனர். முதலில் இதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், பின்னர் அவர்களாக முன் வந்து குழந்தையின் உடல் பாகங்களை தானம் செய்ய முடிவு செய்தனர்.

உடலின் பாகங்கள் தானம்

உடலின் பாகங்கள் தானம்

அதன்படி குழந்தையின் லிவர், கிட்னி, இதய வால்வுகள், கண்கள் உள்ளிட்ட பல்வேறு பாகங்களை தியானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். இந்த பாகங்கள் மொத்தம் 5 பேருக்கு கொடுக்கப்பட உள்ளது. மொத்தம் 5 பேருக்கு அவரின் பாகங்கள் உதவ போகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.நொய்டாவில் நடைபெற்ற இந்த சம்பவம் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதே சமயம் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+