தென்காசியில் கொடூரம். . 70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற 25 வயது வாலிபர்
தென்காசி: தென்காசி அருகே 70 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் செங்கோட்டைய அடுத்த மேக்கரை பகுதியை சேர்ந்தவர் முகமது கனி. இவரது மகன் காசீர் அலி (வயது 25).
இவருக்கும் தென்காசி பகுதியில் உள்ள ரஹ்மத்துல்லாவின் மகள் அசன்பீவி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்கள் மேக்கரையில் தான் வசித்து வந்துள்ளனர்.

பிணமாக கிடந்த மூதாட்டி-பேரன்
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அதனை கொண்டுவதற்காக அசன்பீவி தன் தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் காசீர் அலியும், அவரது பாட்டி ஜெய்துன் பீவியும் மட்டும் இருந்துள்ளனர். 70 வயதான மூதாட்டி ஜெய்துன் பீவியும், காசீர் அலியும் தான் இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். இதற்கிடையே பண்டிகை முடிந்து மகள் அசன்பீவியை மருமகன் வீட்டில் கொண்டு விடுவதற்காக காசீர் அலியின் மாமனார் அடுத்த நாள் காலை காசீர் அலியின் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காசீர் அலி ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்தார். வீட்டின் பின்புறம் உள்ள தொழுவத்தில் மூதாட்டி ஜெய்துன் பீவியும் அரைகுறை ஆடையுடன் பிணமாக கிடந்தார். இதனால் பேரதிர்ச்சிக்குள்ளான அவர்கள் இருவரது உடல்களையும் பார்த்து கதறி அழுதனர். அருகே ஒரு சேவலும் செத்து கிடந்ததால் என்ன நடந்தது? என்று தெரியமால் குழம்பி போய் இருந்தனர்.

அடித்து கொலை
இதைத்தொடர்ந்து சம்பவம் குறித்து அவர்கள் அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் தென்காசி பொறுப்பு எஸ்.பி.யான சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மோப்ப நாய் மற்றும் தடயவியல் துறையினர் உதவியுடன் முதல்கட்டமாக விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக் சந்தேகத்தின் பேரில் போலீசார், அதே ஊரை சேர்ந்த முகம்மது காசிம்(வயது 25) என்பவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்தான் 2 பேரையும் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

குடிபோதையில் தகராறு
விசாரணையில் முகம்மது காசிமுக்கும், காசீர் அலிக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது. இதனால் பக்ரீத் பண்டிகையன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. எனினும் காசீர் அலி வீட்டிற்கு வந்து தூங்கி விட்டார். ஆனால் தூங்காமல் அதையே நினைத்து கொண்டிருந்த முகம்மது காசிம், போதை ஏற்றிக் கொண்டு இரவு காசீர் அலியின் வீட்டுக்கு சென்று மீண்டும் அவரை வம்புக்கு இழுத்திருக்கிறார். மேலும் குடி போதையில், பெரிய கட்டையைக் கொண்டு காசீர் அலியின் தலையில் அடித்துள்ளார். இதில் காசீர் அலியின் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதில், ரத்த வெள்ளத்தில் அப்படியே சரிந்தார்.

பாலியல் வன்கொடுமை
இதற்கிடையே சத்தம் கேட்டு வந்த பாட்டி ஜெய்துன் பீவியை முகம்மது காசி தொழுவத்திற்கு இழுத்துச் சென்று தாக்கியுள்ளார். மேலும் அவரது மார்பு மற்றும் வயிற்று பகுதியில் பலமாக மிதித்துள்ளார். இதேபோல் அவரை பாலியல் ரீதியாககொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன்பின்னர், வயதான மூதாட்டி என்றும் பாராமல் அவரை கட்டையால் அடித்து கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளான். கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் 2 பேரையும் அடித்து கொன்றதோடு, வயதான மூதாட்டியை வன்கொடுமைக்குட்படுத்தியது மேக்கரைப் பகுதியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications