For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக்சிஜன் இல்லை.. "டார்க் ஹவர்".. கோவாவில் ஒரே மருத்துவமனையில்.. 83 கொரோனா நோயாளிகள் மரணம்!

Google Oneindia Tamil News

பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 83 கொரோனா நோயாளிகள் அங்கு அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு அதிகாலை 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாலை 2-6 மணி இடைவெளியில் வரிசையாக இத்தனை பேரும் பலியாகி உள்ளனர்.

4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த 4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் அங்கு இதேபோன்ற மரணங்கள் தொடர்ந்து வருகின்றன.

மரணங்கள்

மரணங்கள்

கோவாவில் ஒரு வாரத்திற்கு முன் 26 பேர் பலியான பின் வரிசையாக தினமும் 10, 15, 8 என்று ஒவ்வொரு நாளும் ஆக்சிஜன் கிடைக்கமால் பலர் பலியாகி வருகிறார்கள். வயதான பலர் இப்படி பலியாகும் சம்பவங்கள் நடக்கின்றன. இதுவரை அந்த மருத்துவமனையில் இன்று பலியான 8 பேரையும் சேர்த்து 83 பேர் பலியாகி உள்ளனர்.

டார்க் ஹவர்

டார்க் ஹவர்

இவர்கள் எல்லோருமே அதிகாலையில்தான் பலியாகி உள்ளனர். பொதுவாக அதிகாலையில் கொரோனா நோயாளிகள் பலருக்கு ஆக்சிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டு ஹைபாக்சியா ஏற்படும். பலருக்கும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் இவர்கள் இறந்துள்ளனர்.

ஆனால்

ஆனால்

ஆனால் கோவா மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான ஆக்சிஜன் இருந்துள்ளது. அங்கு சிலிண்டர்கள் இருந்துள்ளது. பழைய சிலிண்டர்களை மாற்றி புதிய சிலிண்டர்களை இதை கொரோனா வார்டுக்கு கொண்டு செல்லும் முன் இந்த மரணங்கள் நிகழ்ந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஆக்சிஜன் பைப் லைனில் கோளாறு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சில வார்டு

சில வார்டு


அதிலும் வார்டுகளில் 90 நிமிடங்களுக்கு மேலாக ஆக்சிஜன் வழங்கப்படாமல் இருந்துள்ளது. பெரிய அளவில் ஆக்சிஜன் பிரஷர் குறைந்தது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் பிரஷர் டிராப் பதிவானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் இவர்கள் 83 பேரின் மரணத்திற்கு காரணமாக இருக்கும் என்கிறார்கள். கோவா மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

நோயாளிகள்

நோயாளிகள்

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் பலியான 58 பேரில் 33 பேர் கோவா மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் பலியாகி உள்ளனர். கோவாவில் இதுவரை 134542 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 30774 ஆக்டிவ் நோயாளிகள் அங்கு உள்ளனர். 2056 பேர் அங்கு இதுவரை பலியாகி உள்ளனர்.

English summary
83 People died in Goa Medical College Hospital so far due to Oxygen supply fluctuation in the dark hours.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X