ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பேச,கேட்க முடியாத மாற்றுத்திறனாளி கோவை இளைஞர்... இந்தியாவின் முதல் ஐஏஎஸ்
இந்தியாவில் உள்ள படிப்புகளில் மிக முக்கியமானது ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான சிவில் தேர்வு ஆகும். அனைத்து தேர்வுகளின் தாய் எனப்படும் இந்த தேர்வை சாதாரண நிலையில் உள்ளவர்களே சாதிக்க திணறும் காலக்கட்டத்தில் வாய்ப்பேச முடியாத செவித்திறனற்ற இளைஞர் முயன்று சாதித்துள்ளது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.
Recommended Video
இந்தியாவில் பல இளைஞர்களும் பட்டதாரிகளும் மிகவும் முயற்சி செய்து படிக்கும் ஒரு தேர்வு சிவில் தேர்வு எனப்படும் ஆட்சிப் பணித் தேர்வு. சிவில் தேர்வில் வெல்ல பல கட்ட முயற்சிகள் உண்டு. இதற்காக தனியாக பயிற்சி பெற வேண்டும். முதல்நிலை தேர்வு பின்னர் முதன்மை தேர்வு அதன் பின்னர் நேர்முகத் தேர்வு என பல கட்டங்களாக கடந்து வெற்றி பெற்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் போன்ற ஏதாவது ஒரு ஆட்சி பதவியில் அமர வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு இளம் தலைமுறையினருக்கும் மிகப் பெரிய கனவாக உள்ள தேர்வு இதுவாகும்.

ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். ஆனால் முதல் நிலைத் தேர்வில் 5 லட்சத்திற்கும் குறைவானவர்களே எழுதுகின்றனர். ஆயிரக்கணக்கிலேயே தேர்ச்சி பெறும் நிலை ஏற்படுகிறது. அதன் பின்னர் முதல்நிலைத் தேர்வில் எழுதும் மாணவர்களில் 5 ஆயிரத்திற்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். அதில் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் நபர்கள் நேர்முகத் தேர்வை சரியாக பயன்படுத்தினால் ஆட்சிப்பணியில் தேர்வாகின்றனர். ஆண்டுதோறும் 900-க்கும் குறைவான ஆட்சிப்பணி பணி அதிகாரிகள் இவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்.
இத்தேர்வை எழுத முதலில் ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டாவதாக மொழியறிவு, எழுத்து திறமை, இந்திய வரலாறு, நடப்பு அரசியல், நடப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுவல்லாமல் தேர்வில் வருகின்ற பாடங்களை எதிர் கொள்ள வசதியாக ஏதாவது ஒரு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வேண்டும். இத்தேர்வில் தயாராக குறைந்த பட்சம் 8 மணி முதல் 12 மணி நேரம் வரை பயிற்சி எடுக்க வேண்டும். மிகுதியாக படிக்கவேண்டும், மிகுதியாக எழுத வேண்டும் என்கிற நிலை உள்ளது.

இதன் காரணமாக ஆசை இருந்தும், ஆர்வம் இருந்தும் பங்கேற்கும் இளைஞர்கள் இதில் உள்ள கடினமான முயற்சிகளை எதிர்கொள்ள முடியாமல் ஒதுங்கி விடுகின்றனர். இதனால்தான் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தாலும் லட்சக்கணக்கானவர்கள் மட்டுமே தேர்வு எழுதி ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமே ஆண்டுதோறும் தேர்ச்சி பெறும் நிலை உள்ளது.
இத்தகைய தேர்வை எதிர்கொள்ள சாதாரண நபர்கள் மிகவும் தயங்கும் நிலையில் சிறுவயது முதலே பேசும் திறன் இல்லாத. கேட்கும் திறனற்ற இளைஞர் ஒருவர் தன் வாழ்வில் பல சோதனையான கட்டங்களைத் தாண்டி சாதித்து பட்டம் பெற்று பின்னர் சிவில் தேர்வுக்காக தனியாக பயிற்சி பெற்று, அதில் கடின முயற்சி செய்து தன்னுடைய குறையையும் இரண்டாவது முயற்சியிலேயே ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கோவையை சேர்ந்த இளைஞர் ரஞ்சித் குமார். அம்மா அமிர்தவள்ளி வாய்பேசாதோர், செவிதிறனற்ற குழந்தைகள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியர், அப்பா ஆவினில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். ஒரே அண்ணன் மருத்துவராக உள்ளார். ரஞ்சித் குமார் பிறக்கும் பொழுதே வாய் பேச முடியாத செவித்திறனற்ற குழந்தையாகவே பிறந்துள்ளார்.7 மாதத்தில் இக்குறையை பெற்றோர்கள் அறிந்து அதிர்ந்து போயினர். ஆனாலும் இவரது தாயார் தன் மகனை இந்த சமுதாயத்தில் போட்டி போட்டு வளர்க்க வேண்டுமென்று முடிவெடுத்தார்.
பள்ளி ஆசிரியரான இவர் தனது மகனுக்காக ஆசிரியர் பணியில், மீண்டும் செவித் திறன் பேசும் திறன் அற்ற மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் படிப்பை கற்று அதில் பி.எட் பட்டம் பெற்று அது சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இணைந்தார். இதற்கு முக்கிய காரணம் தனது மகனை இதன் மூலம் பயிற்சி செய்ய வைக்கலாம் என்பது ஆகும். அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

தனது மகனை காது கேளாதோர், பேச முடியாத ஒரு பள்ளியில் தான் வேலை செய்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து பத்தாம் வகுப்பில் மிகச் சிறந்த மதிப்பெண் எடுக்க வைத்து, 12 ஆம் வகுப்பிலும் மிகச் சிறந்த மதிப்பெண் எடுக்க வைத்து பின்னர் பொறியியல் படிப்பை முடிக்க வைத்து சமூகத்தின் மிகச் சிறந்த ஒரு மாணவனாக உயர வைத்து, தாயார் என்ற முறையில் அவரது பணி மிகவும் பாராட்டத்தக்கது. இதுகுறித்து ஒன் இந்தியா சார்பில் அவரிடம் பேசியபோது அவர் கூறியது..
மற்ற மாணவர்களைவிட உங்கள் மகன் அசாதாரணமான ஒரு சூழ்நிலையில் தேர்வை சந்திக்க கூடிய நிலை இருந்தது இதை எப்படி எதிர் கொண்டீர்கள்?
எனது மகனுக்கு ஏழு மாதம் இருக்கும்போது இந்த பிரச்சினை இருப்பதை அறிந்து கொண்டோம். அதன் பிறகு நான் ஆசிரியர் பணியில் இருந்த நிலையில் இதற்கான பயிற்சியை தனியாக படித்து அதிலும் பிஎட் பட்டம் பெற்று அது சார்ந்த பள்ளியில் ஆசிரியையாக நான் இணைந்தேன். இதற்கு முக்கிய காரணம் என்னுடைய மகனை தயார்படுத்த வேண்டும் அவனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே. எனக்கு 2 பிள்ளைகள் மூத்த மகன் மருத்துவராக உள்ளார் எனது இரண்டாவது மகன் தான் ரஞ்சித்குமார்.
அவரது வாய் பேச முடியாத கேட்கும் திறன் இல்லாத இப்பிரச்சனையை தீர்க்க அவரை நான் ஆசிரியராக சேர்ந்த பள்ளியிலேயே சேர்த்து அவருக்கு படிப்பதற்கான முயற்சியை கொடுத்தேன். பத்தாவது வகுப்பில் சிறப்பாக மதிப்பெண் பெற்றார், பன்னிரண்டாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். அவரது கனவு ஒரு பொறியியல் பட்டதாரியாக வேண்டும் என்பது அதை அவர் சாதித்தார். சிறுவயது முதலே அவர் மிகுந்த அறிவுடன் இருந்தார்.
ஆட்சிப் பணித் தேர்வு குறித்த ஆர்வம் அவருக்கு எப்படி வந்தது?

ஆட்சிப் பணியில் இது போன்ற சிறப்பு குழந்தைகளுக்கு பங்குபெற வாய்ப்பு இல்லை என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் சென்னை வந்த போது சந்தோஷ் சபரி ஆட்சிப்பணி பயிற்சி மைய ஆசிரியர் சபரிநாதன் எங்களுக்கு புதிய தகவலைச் சொன்னார். அவ்வாறு இல்லை பேச, கேட்கும் திறனற்றவர்களும் ஆட்சிப் பணியில் பங்கேற்று சிவில் தேர்வு எழுதி ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆகலாம் என்று நம்பிக்கையூட்டினார். அது எங்களுக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.
பின்னர் எப்படி அவர் பயிற்சி பெற்றார்?
அதன் பின்னர் சந்தோஷ்-சபரி பயிற்சி மையத்திலேயே எனது மகனை சேர்த்தேன். அங்கு அதன் ஆசிரியர் சபரிநாதன் என் மகனுக்கு தனி பயிற்சி அளித்தார். பொதுவாக என் மகனுக்கு உள்ள சிக்கல் அவரால் சரியாக பேச முடியாது. அதை விட பெரிய பிரச்சனை அவருக்கு கேட்கும் திறன் இல்லை அதனால் பள்ளியில் வகுப்பில் பாடம் எடுப்பதை பாடம் எடுப்பவர்கள் உதட்டின் அசைவை வைத்தே அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த பிரச்சனைகளை புரிந்து கொண்டு மற்றவர்கள் உதவ மாட்டார்கள். ஆனால் சந்தோஷ்-சபரி பயிற்சி ஆசிரியர் சபரிநாதன் என் மகனுக்கு மிகுந்த உதவியாக இருந்தார். பாடங்களை அவருக்குக் கற்றுத் தருவதை மிகுந்த சிரத்தையுடன் செய்தார். பல நேரம் அவருடைய பாடங்கள் சந்தேகங்களை தனியாக அமர்ந்து கேட்டு அதற்கான விளக்கத்தையும் நேரடியாக என் மகனுக்கு தனியாக பயிற்சி கொடுத்ததையும் மறக்க மாட்டோம்.
சாதாரண தேர்விலேயே மிக கடினமாக உள்ள நிலையில் சிவில் தேர்வில் என்ன இடற்பாடுகளை உங்கள் மகன் சந்தித்தார்?
முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கொரோனா காலகட்டத்தில் ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளை எதிர்கொள்ள முடியாமல் என் மகன் தவித்தார். உதட்டு அசைவை வைத்தே வார்த்தைகளை எழுதும் திறன் உள்ள எனது மகன் ஆன்லைன் வகுப்பில் மிகுந்த கஷ்டப்பட நேர்ந்தது. அந்த நேரத்தில் திரையில் ஆங்கில வரிகள் வருவது போன்று உள்ள வகுப்புகளில் தேர்ந்தெடுத்து அதில் பயிற்சி பெற்றார். நானும் அவருடன் ஆன் லைன் வகுப்பில் அமர்ந்து பலநேரம் ஆசிரியர் சொல்வதை என் மகனுக்கு திரும்ப விளக்கிக் கூறி புரிய வைப்பேன்.
இவைகள் எல்லாவற்றையும் உள்வாங்கி கொண்டு அவர் எழுதுவார் இது மிகுந்த சிக்கலான ஒன்றாக அமைந்தது அதையும் தாண்டி சிக்கலான ஒன்றாக இருந்தது நுழைவுத் தேர்வில் அவர் சந்தித்த பிரச்சினை. முதல்நிலை, முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற பின் நேர்முகத்தேர்வுக்கு சென்றபோது அவருக்கு மிகுந்த சிக்கலான ஒரு அனுபவம் நிகழ்ந்தது.
நேர்முகத் தேர்வில் கேள்வி கேட்பவர்களின் உதட்டசைவை வைத்து கேள்வியை புரிந்து கொள்ள வேண்டும் என்கிற நிலையில் என் மகன் தேர்வை எதிர்கொள்ளும் மனநிலை, முதல் முறையாக நேர்முகத்தேர்வுக்கு செல்கிறார் என்பது மிகுந்த மன உளைச்சலை கொடுத்த நேரம். தனக்கு கேள்விகளை புரியும் வகையில் எழுத்துக்களாக வரும் வகையில் கம்ப்யூட்டர் திரை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அதை சரி என்று ஒப்புக்கொண்டவர்கள் நேர்முகத் தேர்வு அறைக்குச் சென்ற பொழுது அப்படிப்பட்ட வசதி செய்து தரவில்லை இதனால் என் மகன் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.
நேர்முகத் தேர்வில் கேள்வி எழுப்பியவர்கள் உதட்டசைவை புரிந்துகொண்டு தனது பதிலை பேப்பரில் எழுதி, எழுதி அவர்களுக்கு கொடுத்தார். கடைசியில் ஸ்கிரீன் கம்ப்யூட்டர் ஏற்பாடு செய்யாதது குறித்து கேட்டபோது அது ஒன்றும் பிரச்சனை இல்லை என்று கூறி அனுப்பி வைத்தனர். இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்தது ஆனாலும் சிவில் தேர்வில் அவர் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார் என்பது மிகுந்த மகிழ்ச்சியான ஒன்று.
ஒரு தாயாராக அவரது வளர்ச்சியில் உங்களுடைய பங்கு என்ன?
முதலிலேயே சொன்னது மாதிரி அவருக்காக, சாதாரண ஆசிரியையாக இருந்த நான் பேசும் திறன் அற்ற காது கேளாதோருக்கான ஆசிரியையாக மாறி பயிற்சி எடுத்துக்கொண்டேன். பின்னர் அவரை உதட்டசைவை வைத்து புரிந்துக்கொள்ளும் பயிற்சியை அளித்தேன். ஒவ்வொரு கட்டத்திலும் அவருக்கான உதவிகள் செய்வது, அவரை தயார் செய்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தினேன்.
ஒரு தாயாராக நான் இத்தகைய பணிகளை செய்தாலும் அதையெல்லாம் தாண்டி அவரது ஆர்வம் அவரது விடாமுயற்சி அவரை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்றே சொல்வேன். ஏனென்றால் சாதாரண மாணவர்களே எதிர் கொள்ளத் தயங்கும் இப்போட்டியில் மிக சவாலான போட்டியில் கிட்டதட்ட முதல் முயற்சி என்றே சொல்லலாம் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார் என்று கூட சொல்லலாம்.
காரணம் அவர் முதல் முறை தேர்வு எழுதிய போது இரண்டு மாதத்திலேயே தேர்வை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் தேர்ச்சி பெற முடியவில்லை. அடுத்த முறை மிகுந்த பயிற்சி எடுத்துக் கொண்டு அவர் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். ஆகவே இதை முதல் முயற்சி என்று கூட சொல்லலாம். மற்றொரு சவால் அவர் சந்தித்தது அவரால் பேச முடியாத காரணத்தினால் ஒவ்வொரு இடத்திலும் எழுதிக் காட்டிய தன்னுடைய மன ஓட்டங்களை சொல்லும் நிலையில் இருந்தார். அந்த சவாலை மிகவும் கடினமாக எதிர்கொண்டுதான் இந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் என்பதை சொல்லி ஆகவேண்டும்.
இறுதியாக இதுபோன்ற குழந்தைகள் உள்ள பெற்றோர் இதுபோன்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு என் மகன் ஒரு உதாரணமாக இருக்கிறார். பெற்றோர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது இதுபோன்ற குழந்தைகளை ஒதுக்கி விடாதீர்கள். சில குடும்பங்களை பார்க்கிறேன் இதுபோன்ற குழந்தைகளினால் கணவன் மனைவி பிரிந்து செல்லும் நிலையும் பார்க்கிறேன். இதையெல்லாம் தவிர்த்து யாரையும் முயற்சி கொடுத்தால் வெற்றி பெற வைக்கலாம் என்பதில் பெற்றோர்கள் உறுதியாக இருங்கள். மாணவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு என் மகனை உதாரணமாக கொள்ளுங்கள், துவண்டு விடாதீர்கள் முயற்சி செய்யுங்கள் வெல்லலாம்.
ரஞ்சித் குமாருக்கு அளிக்கப்பட்ட பேட்டி குறித்து சந்தோஷ் சபரி பயிற்சி மைய ஆசிரியர் சபரிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது...
"ரஞ்சித்குமார் மற்றொரு மாணவர் மூலமாகவே எனக்கு அறிமுகமானவர், அவரால் மற்றவர்கள் பேசுவதை கேட்க முடியாது என்பதால் வகுப்பறையில் அவரை முன் வரிசையில் அமர வைப்பேன். அவர் உதட்டசைவை வைத்து தான் பாடங்களை புரிந்து கொள்ளும் சிக்கலான நிலையில் இருந்தார். அதற்காகவே நான் பாடம் எடுக்கும் பொழுது அவரைப் பார்த்தே பேசுவேன். அதன் மூலம் அவர் என்னுடைய உதட்டசைவை வைத்து புரிந்துகொண்டு பாடங்களை எழுதுவார்.
அதுமட்டுமல்லாமல் அவர் பாடங்களை உடனடியாக திருத்தி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று அவருக்காக தனியாக ஆலோசனை கூறுவேன். அவர் மிகுந்த முயற்சியுடன் இந்த தேர்வுகளை அணுகினார். தமிழ் மொழியில்தான் அவர் பயிற்சி எடுத்தார் அதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்கள் அவருடைய முயற்சியில் உறுதுணையாக இருந்தாலும் அதை எல்லாவற்றையும் தாண்டி தாண்டி அவரது விடாமுயற்சியைப் பாராட்ட வேண்டும். அவர் எடுத்த கடுமையான முயற்சி, விடாமுயற்சி அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எனக்கு தெரிந்து இந்தியாவில் பேசும் திறனற்ற. செவித்திறனற்ற மாற்றுத் திறனாளி மாணவர் ஐஏஎஸ் பயிற்சியில் தேர்ச்சி அடைந்தது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்று நினைக்கிறேன். அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்". இவ்வாறு அவரது பயிற்சி மைய ஆசிரியர் சபரிநாதன் தெரிவித்தார்
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை என்பதற்கு உதாரணமாக தன்னுடைய பிரச்சனையை மீறி இந்தியாவின் அனைத்துத் தேர்வுகளின் தாய் என்று அழைக்கப்படும் சிவில் தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர் ரஞ்சித்குமாரின் முயற்சி இது போன்ற நிலையில் உள்ள மற்றவர்களுக்கு ஊக்கமாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை அதற்கு உதாரணம் ரஞ்சித் குமார்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications