அதிர்ச்சி.. அபுதாபி ஏர்போர்ட்டில் திடீர் வெடிகுண்டு தாக்குதல்.. 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி..!
அபுதாபி ஏர்போர்ட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
அபுதாபி: அபுதாபி ஏர்போர்ட்டில் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.. இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளது, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியுல் உள்ள ஏர்போர்ட்டை விரிவுபடுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது.. சமீப காலமாக கட்டுமான பணிகள் இங்கு நடந்து வரும் நிலையில்தான், திடீரென வெடிகுண்டு நேற்றைய தினம் வெடித்திருக்கிறது..

யாருமே எதிர்பார்க்காத வகையில், ட்ரோன் மூலம் திடீர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு போலீசார் கூறுகிறார்கள்.
ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியிருப்பதுதான் தற்போது அங்கு பதற்ற நிலையையும் உருவாக்கி உள்ளது.. அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.. எண்ணெய் நிறுவனமான ADNOC என்ற கிடங்குக்கு பக்கத்தில் முதலில் வெடிகுண்டு வெடித்துள்ளது.. இதனால், முசாஃபா பகுதியில் 3 ஆயில் டேங்கர்கள் தீப்பற்றி வெடித்து சிதறியிருக்கின்றன.. இன்னொரு வெடிகுண்டு, ஏர்போர்ட் பக்கத்தில் வந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு போலீசார் கூறுகின்றனர்..

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்தியர்கள், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. உயிருக்கு ஆபத்தான நிலையில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. ஆனால், படுகாயமடைந்தவர்கள் யார் என்று அடையாளம் காணப்படவில்லையாம்.. அதுகுறித்து அபுதாபி போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு நாங்கள்தான் காரணம் என்று ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.. வெடிகுண்டு தாக்குதல் 2 ட்ரோன்கள் மூலம் நடைபெற்று இருக்கலாம் என்று வளைகுடா மாகாண அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.. எனினும், இது தொடர்பான முழு விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.. மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய ஏர்போர்ட் பகுதியில் திடீரென நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல், அபுதாபி மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றமான சூழ்நிலையும் ஏற்படுத்தி உள்ளன.












Click it and Unblock the Notifications