UAE வைத்த ஆப்பு.. வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் உட்பட 9 நாட்டினருக்கு விசா கிடையாது.. ஏன் தெரியுமா?
துபாய்: அரபு நாடுகளில் முக்கியமான நாடாக இருக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்குள் வேலை மற்றும் சுற்றுலாவுக்கு செல்ல 9 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது திடீரென்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் உள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது. நம்நாடு உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பணிக்கு சென்று வருகின்றனர். அதேபோல் ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான வெளிநாட்டினர் சுற்றுலா சென்று வருகின்றனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை எடுத்து கொண்டால் தலைநகர் அபுதாபி மட்டுமின்றி துபாய், ஷார்ஜா, அஜ்மன், ராஸ் அல் காமிமா, புஜைரா, உம் அல் குவெயின் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. இந்த நகரங்கள் சுற்றுலாவுக்கு பெயர் பெற்றுள்ளன.
இந்நிலையில் தான் திடீரென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் 9 நாடுகளை சேர்ந்தவர்கள் சுற்றுலா மற்றும் வேலைக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த 9 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு சுற்றுலா - வேலைக்கான விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆப்கானிஸ்தான், லிபியா ஏமன், சோமாலியா, லெபனான் வங்கதேசம், கேமரூன், சூடான், உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு பணி மற்றும் சுற்றுலாவுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பம் செய்தால் அதனை ஏற்க கூடாது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் ஏற்கனவே விசா பெற்று பணியாற்றி வரும் இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இந்த உத்தரவு எந்த பிரச்சனையும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய உத்தரவின் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் விளக்கம் அளிக்கப்படவில்லை.
இருப்பினும் கூட இந்த உத்தரவின் பின்னணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. விசா தடை செய்யப்பட்டுள்ள 9 நாடுகளிலும் உள்நாட்டு பிரச்சனை என்பது உள்ளது. அதனை மையப்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பில் சிக்கல் வராமல் இருக்க அந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வேலை மற்றும் சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications