"எனக்கே சரக்கு இல்லையா.." ஒயின் ஷாப்பிற்கு தீ வைத்த இளைஞர்! தீபாவளி நாளில் பெரும் பரபரப்பு
விசாகப்பட்டினம்: தனக்கு மது வழங்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர் மொத்தமாக மதுக் கடையைக் கொளுத்திய பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்றைய தினம் தீபாவளி பண்டிகை நாடு முழுக்க கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பி தீபாவளியைக் கொண்டாடினர்.

அதேநேரம் தீபாவளியை முன்னிட்டு மது விற்பனையும் அதிகரித்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மது விற்பனை அதிகமாகவே இருந்தது. தீபாவளிக்கு முதல்நாளே மது குடிப்போர் மது வகைகளை வாங்கி குவித்தனர். இதனால் மது விற்பனையும் அதிகரித்தது.
மதுக் கடை: இதற்கிடையே ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மதுர்வாடா பகுதியில் வினோத சம்பவம் அரங்கேறியது. அதாவது மதுக் கடை ஒன்றில் தனக்கு மது கிடைக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், அப்படியே மொத்தமாக மதுக் கடைக்கு தீ வைத்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதும் செய்தனர்.
மதுர்வாடா பகுதியைச் சேர்ந்தவர் மது. இவர் அப்பகுதியில் அமைந்துள்ள ஒயின் ஷாப் ஒன்றில் மது வாங்க சென்றுள்ளார். இருப்பினும், கடை க்ளோஸ் செய்யும் நேரம் வந்துவிட்டதால் ஒயின் ஷாப் ஊழியர் அவருக்கு மது வழங்க மறுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒயின் ஷாப் ஊழியர்கள் அவரை எச்சரித்த நிலையில், அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.
தீ வைப்பு: இருப்பினும், இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பெட்ரோல் டேங்குடன் கடைக்குத் திரும்பினார். ஒயின் ஷாப்பிற்கு பெட்ரோல் ஊற்றி கடைக்கு அவர் தீ வைத்தார். அங்கே உள்ளே ஊழியர்கள் இருந்த போதிலும், அதை அவர் கண்டுகொள்ளவில்லை. இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
ஒயின் ஷாப்பில் அந்த நபர் பெட்ரோல் ஊற்றத் தொடங்கியவுடன் அச்சமடைந்த ஊழியர்கள் அங்கிருந்து தெறித்து ஓடினர். அவர்கள் நெருப்பை அணைக்க முயன்றனர். இருப்பினும், பெட்ரோல் ஊற்றியதாலும், உள்ளே இருந்தது மது வகைகள் என்பதால் தீ மளமளவென பரவியது. வெறும் சில நிமிடங்களில் ஒட்டுமொத்தமாகக் கடை நாசமடைந்தது.
கைது: இதில் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான மது வகைகள், கணினி, பிரிண்டர் ஆகியவை சேதமடைந்ததாக கூறப்பட்டது. அந்த நபருக்கு எதிராக ஐபிசி 307 மற்றும் 436 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் முதற்கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர். கோபம் காரணமாக இப்படிச் செய்தாரா இல்லை அவருக்கு வேறு எதாவது திட்டம் இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications