ZEE5 ஓடிடி தளத்தில் வெளியானது.. அட்டகாச கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் 'அறிவான்'.. ரசிகர்கள் வரவேற்பு
சென்னை: ZEE5 ஓடிடி தளத்தில், வெளியாகியுள்ள, கிரைம் திரில்லர் வெப் சீரிஸ் அறிவான். பெண்களை கடத்தி கொலை செய்யும் சீரியல் கில்லரை கண்டுபிடிக்க முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவர் எடுக்கும் முயற்சிகளை சுவாரசியமாக காட்சிப்படுத்தியுள்ளனர்.
ஜபு தீன், ஜேம்ஸ் குமார், காயத்திரி சேகரன், உதய சவுந்தரி, ஆர்.வெங்கா உள்ளிட்டோர் நடிப்பில் அட்டகாச மேக்கிங்கில் வெளியாகியுள்ள அறிவான் வெப்சீரிஸ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.
ஹரி. 42 வயது முடிதிருத்தும் தொழிலாளியாக உள்ளார். இவரது தந்தை குரு, ஒரு ஓய்வுபெற்ற புகைப்படக்கலைஞர். ஹரிக்கு இஎஸ்பி சக்தி உள்ளது. அதாவது, நடப்பதை முன்கூட்டியே அறியும் சிறப்பு சக்தி இவருக்கு இருக்கிறது.
இந்த சக்தியினால் நல்லதுக்கு பதில், பிரச்சினைகள்தான் அதிகமாகிறது. இப்படித்தான், ஆறு வருடங்களுக்கு முன்பாக அவரது வேலையும், அவரது குடும்ப வாழ்க்கையும் பெரும் இன்னலுக்கு உள்ளானது. திருமணம் முடிந்து 10 வருடங்களில் விவாகரத்து, பார்த்துக் கொண்டிருந்த போலீஸ் வேலை ராஜினாமா என எவ்வளவோ பிரச்சினைகளை சந்திக்க நேரிட்டது ஹரி.
இந்த நிலையில்தான், ஒரு இளம் பெண் திடீரென காணாமல் போகிறார். காவல்துறை அவரை தீவிரமாக தேடி வரும் நிலையில், ஒரு சீரியல் கில்லர் தொலைக்காட்சி நேரலை ஷோவிற்கு போன் செய்து, அந்த பெண்ணை தான்தான் கடத்தி உள்ளதாக தெரிவிக்கிறார்.
இதைக் கேட்டு மக்கள் பதறிப்போகிறார்கள். ஆனால், ஹரி தனது தேஜாவு அறிவின் மூலமாக, இதை அறிந்துள்ளார். 6 வருடங்கள் முன்பாக பல பெண்களை கடத்தி கொன்ற, சீரியல் கில்லர்தான், இவராக இருக்க கூடும் என்று ஹரி சந்தேகிக்கிறார். மீண்டும் அதே கொலையாளி திரும்பியிருப்பதாக, அவர் உள்ளுணர்வு சொல்கிறது.
ஹரி தான் இளம் பெண்கள் கடத்தல் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்தவர். எனவே, கொலையாளியை பின்தொடர திட்டமிடுகிறார். தேவா என்பவருடன் கூட்டு சேர்க்கிறார். இந்த இரண்டு பேரும் இணைந்தனரா? யாரென்று தெரியாத அந்த சீரியல் கில்லரை கைது செய்தனரா? கொலையாளியை நெருங்கும் போது இவர்கள் இருவர் தொடர்பாகவும் உள்ள அதிர்ச்சியூட்டும் எந்த மாதிரி உண்மைகள் வெளியே வந்தன? போன்றவற்றை மிகவும் விறுவிறுப்பாகச் சொல்லி உள்ளது இந்த தொடர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்













Click it and Unblock the Notifications