இதோ இந்த 80 வயசு பாட்டியை.. 14 வயசு பையன்.. உச்சக்கட்ட கொடுமை.. அலறி போன அரியலூர்!
80 வயது பாட்டியை 14 வயது சிறுவன் கொலை செய்திருக்கிறான்
அரியலூர்: இதோ இந்த 80 வயசு பாட்டியை கொன்றது 14 வயசு சிறுவனாம்.. கழுத்தை நெரித்து, தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்றுள்ளான்.. இந்த சம்பவத்தினால் அரியலூர் மாவட்டமே அலறி கிடக்கிறது.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் சிவகாமி இந்த பாட்டிக்கு 80 வயதாகிறது.. இவருக்கு 4 மகள்கள்.. எல்லாருக்குமே கல்யாணமாகிவிட்டது.. வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

கணவரும் இறந்துவிட்டதால், குவாகம் போலீஸ் நிலையம் ஸ்டேஷன் அருகே உள்ள ஒரு குடிசையில் பாட்டி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.. அவரது சடலம் கட்டில் மேல் கிடந்தது.
குவாகம் போலீசார் சிவகாமி பாட்டியின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைத்தனர்... பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், சிவகாமி தலையில் தாக்கப்பட்டு, கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.
உடனே தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் துரித விசாரணையில் இறங்கியபோதுதான், 14 வயசு பையன் சிக்கினான்.. பாட்டியின் காதில் இருந்த அரை பவுன் கம்மலுக்காகவே இந்த கொலையை செய்திருக்கிறான்... அவரது கழுத்தை நெரித்து, பிறகு கல்லால் அவரது தலையை தாக்கி கொன்றிருக்கிறான்.. 100 ரூபாயை பாட்டி வைத்திருந்தார்.. அதையும் எடுத்து கொண்டு போயிருக்கிறான்.
திருடிய நகையை தன் அப்பாவிடம் சிறுவன் ஒப்படைத்ததாக தெரியவந்துள்ளது. அந்த நகையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. சிறுவனை கைது செய்த போலீசார் முதல் வேலையாக கொரோனா டெஸ்ட் எடுத்து பார்த்தனர்.. தொற்று இல்லை என்று உறுதியானதும், சிறுவனை திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சிறுவனின் அப்பாவுக்கு மொத்தம் 8 குழந்தைகளாம்!


Click it and Unblock the Notifications
