அரியலூர் மஞ்சுளாவுக்கு.. இரவில் ஏரிக்கரையில் என்ன வேலை? அதுவும் பாத்திரம் கழுவுற இடத்துல.. அட கருமமே
அரியலூர்: அரியலூர் அருகே திருமணம் மீறிய உறவில் பிறந்த குழந்தை மாயமானதாக நாடகமாடிய தாய் மற்றும் பாட்டியிடம் விசாரணை நடத்தியதில் குழந்தையை கொன்று புதைத்தது தெரிய வந்ததால் போலீஸார் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ளது மீன்சுருட்டி.. இங்கு கட்டிட மேஸ்திரியாக உள்ளவர் சித்திரை சோழன்... இவரது மனைவி பெயர் பரிமளா.. 48 வயதாகிறது.. 5 மகன்கள், 4 மகள்கள் என்று மொத்தம் 9 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
மஞ்சுளா: இதில், மூத்த மகள் மஞ்சுளாவிற்கு 18 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. ஆனால், சில மாதங்களுக்கு முன்பு, இவர் திடீரென கர்ப்பமாகிவிட்டார். இதனால் பதறிப்போன பெற்றோர், இதுகுறித்து விசாரித்திருக்கிறார்கள்.. ஆனால், மஞ்சுளா எதுவுமே சொல்லவில்லை, யாரையுமே காட்டிக் கொடுக்கவும் இல்லை.

இதனால் குழப்பமடைந்த குடும்பத்தினர், அபார்ஷன் செய்வதற்காக முயன்றனர்.. ஆனால், மஞ்சுளா அபார்ஷனுக்கும் சம்மதிக்கவில்லை. வேறுவழியின்றி ஒட்டுமொத்த குடும்பத்தினரும், கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று துருவி துருவி விசாரித்தார்கள்.. அப்போதுதான், அன்புதுரை என்பவரது பெயரை சொன்னார் மஞ்சுளா.. அன்புதுரைக்கு 21 வயதாகிறது. அதே ஊரை சேர்ந்தவராம்.. பின்னர், பெற்றோர் ஜெயங்கொண்டம் மகளிர் போலீசுக்கு சென்று புகார் தந்ததையடுத்து, அன்புதுரை போக்சோவில் கைதானார்.
அடையாளம்: இதனிடையே, கடந்த 29ம் தேதி மஞ்சுளாவுக்கு பெண் குழந்தை பிறந்தது.. இந்த தகவலையறிந்த மகளிர் போலீசார், விரைந்து வந்து, குழந்தையின் அங்க அடையாளங்களை பதிவு செய்து கொண்டார்கள்.. பின்னர், DNA டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று சொல்லி, குழந்தையுடன் நேற்றைய தினம் (புதன்கிழமை) வர வேண்டும் என்று மஞ்சுளாவிடம் சொல்லிவிட்டு சென்றார்கள்.
இப்படிப்பட்ட சூழலில், கடந்த 30ம் தேதி, தன்னுடைய குழந்தையை காணவில்லை என்று மஞ்சுளா திடீரென ஒப்பாரி வைத்து அழ ஆரம்பித்தார்.. அவரது அம்மா பரிமளாவும் சேர்ந்து, குழந்தையை காணவில்லை என்றார்.. இதையடுத்து, மீன்சுருட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாயமான குழந்தையை தேடி ஆரம்பித்தார்கள்..
குழந்தை: ஒருவேளை குழந்தை இல்லாதவர்கள் யாராவது கடத்தி சென்றிருப்பார்களா? அல்லது குழந்தை கடத்தல் கும்பலின் வேலையாக இருக்குமோ? என்றெல்லாம் நினைத்து குழந்தையை தேடினார்கள்.. ஆனால், மஞ்சுளாவின் நடவடிக்கைகளை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் வலுக்கவும், தங்கள் பாணி விசாரணையை மஞ்சுளாவிடம் நடத்தினார்கள்.
அப்போதுதான் மொத்த உண்மையையும் போலீசில் சொன்னார் மஞ்சுளா.. அதாவது, DNA டெஸ்ட் என்று சொன்னதுமே மஞ்சுளா, பயந்துவிட்டாராம்.. இதை பற்றி, தன்னுடைய அம்மாவிடம் சொல்லியுள்ளார்.. அதற்கு பிறகுதான், குழந்தையை கொல்வது என்று தாயும் - மகளும் முடிவு செய்துள்ளனர்.. இதுக்காகவே, அங்கிருக்கும் ஏரிக்கரையில் பாத்திரம் கழுவுவதற்காகவே ஒதுக்கப்பட்ட இடத்திற்கு நள்ளிரவில் குழந்தையை தூக்கி சென்றுள்ளனர்...
கொடுமை: அங்கேயே குழந்தையை கொன்றதுடன், அங்கேயே குழியையும் தோண்டி உடலையும் புதைத்திருக்கிறார்கள்.. ஒருவேளை குழந்தையின் உடல் நாளடைவில் அழுகி, அதனால் துர்நாற்றம் ஏற்பட்டுவிடுமோ என்று நினைத்து, அந்த துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக துணிகளுக்கு பயன்படுத்தப்படும் "கம்ஃபோர்ட்" டை தண்ணீரில் கலக்கி, ஏரிக்கரை முழுவதும் தெளித்து விட்டு வீட்டிற்கு வந்தார்களாம். இவ்வளவையும் மஞ்சுளா சொன்னதை கேட்டு போலீசாரே மிரண்டு போய்விட்டார்கள்.
இதையடுத்து, ஏரிக்கரைக்கு ஓடிய போலீசார், புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்து, போஸ்ட் மார்ட்டத்துக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இப்போது தாயும் - மகளும் சேர்ந்தே ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள்.
நர்ஸ் : நேற்றுகூட ஒரு நர்ஸ், தனக்குதானே பிரசவம் பார்க்கும்போது, அந்த பச்சிளம் குழந்தையின் கால்களை வெட்டி எறிந்து கொன்ற சம்பவத்தை கேட்டு சென்னைவாசிகள் கதிகலங்கி போயிருக்கிறார்கள்.. அந்த அதிர்ச்சியே இன்னும் மக்களுக்கு விலகாத நிலையில், அரியலூர் ஏரிக்கரையில், இந்த 2 பெண்கள் இப்படி ஒரு கொடுமையை செய்து வைத்திருக்கிறார்கள்.
ஆக மொத்தம்,, கருணையின் நிழலாக, இரக்கத்தின் இன்னொரு அவதாரமாக, மன்னிப்பின் மறு உருவமாக, காலம் காலமாக பெண்கள் பார்க்கப்பட்டு வந்த நடைமுறைகள் எல்லாம், இதுபோன்ற கல்நெஞ்சுக்காரிகளால் சுக்குநூறாக நொறுங்கி கழண்டு விழுந்து கொண்டிருக்கிறது..!!












Click it and Unblock the Notifications