தற்கொலைப் படை தாக்குதல் பேச்சு- அகோரத்தைத் தொடர்ந்து பாஜகவின் அரியலூர் ஐயப்பன் கைது!

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டளைப்படி அரியலூர் மாவட்டத்தில் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்துவோம் என பேசியதற்காக அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதலே பாஜக தலைவர்கள் மிரட்டும் தொனியில் பேசுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக தமிழக முதல்வரை பாஜக தலைவர்கள் அவதூறாக பேசி வருகின்றனர்.

கல்யாணராமன்

கல்யாணராமன்

கடந்த மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து ட்விட்டரில் ஆபாசமாக பதிவிட்டார் பாஜகவின் கல்யாண ராமன். இதனையடுத்து சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசாருடன் ஒத்துழைக்க மறுத்து வாக்குவாதம் செய்திருந்தார் கல்யாண ராமன். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

அகோரம் கைதாகி விடுதலை

அகோரம் கைதாகி விடுதலை

இந்த நிலையில் அண்மையில் அரியலூரில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் அகோரம், பாஜக மாவட்ட தலைவர் ஐயப்பன் உள்ளிட்டோர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். இதனைத் தொடர்ந்து அகோரம் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டதால் விடுதலையானார்.

தற்கொலைப் படை தாக்குதல்

தற்கொலைப் படை தாக்குதல்

இதனிடையே அரியலூர் ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை தமிழக அரசு ஒரு வாரத்தில் குறைத்தாக வேண்டும்; அப்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அரியலூர் மாவட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவுப்படி தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் என அம்மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு ஐயப்பன் மீது போலீசார் வழக்குப் பதிவு கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடும் நடவடிக்கை இல்லை

கடும் நடவடிக்கை இல்லை

பாஜகவினரின் அநாகரிகமான, அவதூறான பேச்சுகளுக்காக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்கிறது. அதேநேரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு உடனே ஜாமீனும் வழங்கப்படுகிறது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படாததால் உடனடியாக அவர்கள் விடுதலை ஆகிவிடுகின்றனர். இந்த போக்கினால்தான் அகோரம், ஐயப்பன் போன்ற பாஜகவினர் தமிழக அரசையும் முதல்வர் மு.க.ஸ்டாலினையும் மிரட்டும் வகையில் பேசுவது வாடிக்கையாகிவிட்டது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+