முதலமைச்சரே இப்படி சொல்லிட்டாரு! இதைவிட வேறு என்ன வேணும்! திக்குமுக்காடி போன அமைச்சர் சிவசங்கர்!
அரியலூர்: முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை பற்றி இவ்வளவு தூரம் புகழ்வார் என்பதை சிறிதும் எதிர்பார்க்காத போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சந்தோஷத்தில் திக்குமுக்காடி நிற்கிறார்.
அதிலும் குறிப்பாக தன்னை ஒரு களப்போராளி என முதல்வர் வாய் நிறை புகழ்ந்தது, அமைச்சர் சிவசங்கருக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.
அரியலூர், பெரம்பலூர் மாவட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், ஆ.ராசா முன்னிலையில் அவரைக் காட்டிலும் அதிகமாக அமைச்சர் சிவசங்கரை முதல்வர் புகழ்ந்து பேசியது கவனிக்கத்தக்கது.
இது தொடர்பாக முதல்வரின் பேச்சு விவரம் வருமாறு;

துணைத் தலைவர்

மாணவி அனிதா
''மாணவி அனிதாவை யாராலும் மறக்க முடியாது. அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று தனது கல்வியுரிமையை போராட அதற்குத் துணையாக இருந்தவர். சட்டமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, சமூக வலைத்தளங்களாக இருந்தாலும் சரி, கட்சி மீதோ, தலைமை மீதோ ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் முன்னின்று வந்து தடுக்கக்கூடிய களப்போராளிதான் நம்முடைய சிவசங்கர்.''

போக்குவரத்துத் துறை
''போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இவரால் முடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரத்தில் இயங்கக்கூடிய பேருந்துகள் குறித்து தகவல் அறிய சென்னை பஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அரசு சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம் என்று விருதினை அளித்திருக்கிறது.''

எத்தனையோ சாதனைகள்
''சென்னை பேருந்துகளில் பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பயணிகளுடைய வசதிக்காக whatsapp இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுப் பேருந்துகளில் 3 வயது வரை இலவசமாகப் பயணிக்கலாம் என்று இருந்ததை 5 வயது வரை என்று உயர்த்தி இருக்கிறோம்.ஓட்டுநர் உரிமத்திற்காக இணையத்தில் பதிவு செய்யக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.இப்படி எத்தனையோ சாதனைகளைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கக்கூடியவர்தான் நம்முடைய அமைச்சர் சிவசங்கர்.''












Click it and Unblock the Notifications