ஆதார் கார்டு ஆதாரம்.. அரியலூர் ஆற்றங்கரை கிளம்பிய தஞ்சாவூர் தாத்தா.. கொள்ளிடம் ஏன் வந்தாரு? அட பாவமே
அரியலூர்: யாரிந்த முதியவர் என்று தெரியவில்லை.. அரியலூர் போலீசார் இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்துள்ள தா.பழூர் அருகே உள்ளது மதனத்தூர் என்ற பகுதி.. இதன் அருகிலேயே கொள்ளிடம் ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.. இதையொட்டி, நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலம் அமைந்துள்ளது.

தற்போது கோடை வெயில் என்பதால், இந்த ஆற்றில் தண்ணீர் வரத்து அவ்வளவாக இல்லை.. எனவே, உள்ளூர் மக்கள், இந்த ஆற்றுப்பகுதியில், ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருக்கிறார்கள்..
மேய்ச்சல்: அப்படித்தான் அந்த பகுதி மக்கள், ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, 60 வயது பெரியவர் ஒருவர் படுத்திருப்பதை பார்த்தனர்.. மூச்சுப்பேச்சின்றி அவர் கிடந்ததை பார்த்ததும் பதறிப்போன அம்மக்கள், உடனடியாக தா.பழூர் போலீசுக்கு தகவல் தந்திருக்கிறார்கள்.
போலீசாரும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, முதியவரை பார்த்தனர்.. அப்போதுதான் அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.. அவருக்கு பக்கத்திலேயே பூச்சிக்கொல்லி மருந்து பாட்டிலும், ஒரு பையும் விழுந்து கிடந்தது.. அந்த பையை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில் அந்த தாத்தாவின் ஆதார் கார்டு ஜெராக்ஸ்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது...
போலீஸார்: அப்போதுதான் இறந்தவர் பெயர் சுந்தரமூர்த்தி, 60 வயதாகிறது,, தஞ்சாவூர் மாவட்டம் மருதநல்லூர் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.. அந்த ஆதார் கார்டிலிருந்த அட்ரஸை வைத்து, சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தந்தார்கள்..
பிறகு, சுந்தரமூர்த்தியின் சடலத்தையும் கைப்பற்றி ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். ஆனால், இவர் ஏன் இந்த பாலத்துக்கு வந்தார்? இங்கு வந்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.. அதுவும் ஆதார் கார்டு ஜெராக்ஸுடன் ஏன் வரவேண்டும்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் இறங்கியிருக்கிறார்கள்.
என்ன காரணம்: ஆனால், இந்த நீலத்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றுப்பாலம்தான், தஞ்சை மாவட்டத்தை இணைக்கும் பாலமாக உள்ளது.. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கிளம்பி, அரியலூர் மாவட்டம் வந்து தற்கொலை செய்துள்ள சம்பவம் மிகவும் அதிர்ச்சியை தந்து வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications