இந்திய சரித்திரத்தில் முதல் 2 துயரங்கள் நிகழ்ந்த அரியலூர் மருதையாற்று ரயில் பாலம்-மறக்க முடியுமா?
அரியலூர்: இந்தியாவின் துயரமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிஷா பாலசோர் ரயில் விபத்து நிகழ்ந்துவிட்டது. 294 பேரை பலி கொண்டிருக்கிறது இந்த ரயில் விபத்து. நாடு விடுதலைக்குப் பின்னரான ரயில் விபத்துகளைப் பற்றி எழுதும் போதும் பேசும் போதும் அரியலூர் ரயில் விபத்து உச்சரிக்கப்படாமல் இருப்பது இல்லை.
அரியலூர் ரயில் விபத்து- அரியலூர் மருதையாற்று ரயில் பாலத்தில் நிகழ்ந்த இரு ரயில் தொடர்பான சம்பவங்கள் இந்தியாவின் வரலாற்றில் எப்போதும் துயரமான சம்பவங்களாக இருக்கும்.

இந்தியா விடுதலைக்குப் பின் நிகழ்ந்த மிகப் பெரிய ரயில் விபத்து அரியலூர் மருதையாற்று பாலத்தில்தான் நிகழ்ந்தது.
அது 1956-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி. சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி பெருமழைக்கு இடையே எக்ஸ்பிரஸ் ரயில் பயணித்து கொண்டிருந்தது. அரியலூர்- கல்லாகம் இடையேயான மருதையாற்று பாலத்தை ரயில் எட்டியதுதான் தாமதம்.. கொட்டும் பேய்மழைக்கு நடுவே கும்மிருட்டில் இரைச்சலெடுத்து ஓடும் காட்டாற்றை விஞ்சும் மரண ஓலங்களே எங்கும்.. ஆம் மருதையாற்று பாலம் பலமிழந்து ஆற்றுக்குள் மூழ்க தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளும் அத்தனை பயணிகளுடன் அடுத்தடுத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
விடுதலை இந்திய வரலாற்றில் மிகப் பெரிய முதலாவது ரயில் விபத்து இது. இதில் மொத்தம் 250 பயணிகள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர். ஆனால் கிடைத்தது என்னவோ 150 உடல்கள்தான். எஞ்சிய உடல்கள் சிதைந்து அழுகின.. எங்கே கரை ஒதுங்கின.. எந்த இடத்தில் மணலில் புதைந்தது என்பது யாரும் அறியாதது!
இந்திய வரலாற்றின் பெருந்துயரமான அந்த தருணத்தில் மத்திய அமைச்சராக இருந்த அழகேசனை நோக்கி அரியலூர் அழகேசா! ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என கேள்வி எழுப்பிய வரலாறு அப்போதுதான் நிகழ்ந்தது.
இதன்பின்னர் 1987-ம் ஆண்டு அதே அரியலூர் மருதையாற்று பாலம் இன்னொரு வகை துயரத்தை சந்தித்தது- விடுதலை இந்திய வரலாற்றில் அதுவும் வேறுவகை முதல் துயரம்தான்! ஆம் இந்திய விடுதலைக்குப் பின் போராளி குழு ஒன்று முதன் முதலில் பயணிகள் ரயிலை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதும் இதே மருதையாற்று பாலத்தில்தான் நிகழ்ந்தது!
அண்மையில் சூரி நடித்து வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் காட்சியாக இடம்பெறுமே நெஞ்சை பதற வைக்கும் ரயில் விபத்து காட்சி.. அது மருதையாற்று ரயில் பால தகர்ப்பின் எதிரொலிதான்!
இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனிநாடாக- தனி சுதந்திர நாடாக வேண்டும் என்பதை இலக்காக கொண்ட பொன்பரப்பி தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலைப் படையினர் நடத்திய மருதையாற்று பால தகர்ப்பு சம்பவத்தையே விடுதலை திரைப்படம் மறைமுகமாக சுட்டிக்காட்டியது. மருதையாற்று பாலம் தகர்ப்பில் மொத்தம் 26 பேர் கொல்லப்பட்டனர்.
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications