ஜெயலலிதாவை சாகடித்த பெருமை.. மன்னார்குடி கும்பலுக்கே உள்ளது - கரூர் சின்னசாமி பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

அரியலூர்: அதிமுகவிற்கு அவப்பெயரை உண்டாக்கி ஜெயலலிதாவின் மனதை கெடுத்து அவருக்கு நோயை உண்டாக்கி சாகடித்த பெருமை மன்னார்குடி கும்பலுக்கு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் அண்ணா சிலை அருகே அதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமி பேசியதாவது: அதிமுகவிற்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி, ஜெயலலிதாவின் மனதைக் கெடுத்து, அவருக்கு நோயை உண்டாக்கி சாகடித்த பெருமை மன்னார்குடி கும்பலுக்கு உள்ளது. தற்போது கட்சியில் தங்களைச் சேர்த்துக்கு கொள்ளுமாறு கேட்கின்றனர் மன்னார்குடி கும்பல்.

admk jayalalitha

என்ன நடந்தாலும், எவ்வளவு சோதனை வந்தாலும், ஆட்சிக்கே வரவில்லை என்றாலும் பரவாயில்லை ஒரு போதும் மன்னார்குடி கும்பலை கட்சியில் சேர்க்க மாட்டேன் என்று கூறிய ஒரே துணிச்சல் மிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். 40 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் அதிமுகவையே ஆதரிக்கின்றனர். விஜய் உள்ளிட்ட யார் அரசியலுக்கு வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை.

திமுக ஒரு செத்துப்போன கட்சி. அந்தக் கட்சி இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது. அன்று கருணாநிதி இருந்தார் ஆட்சிக்கு வந்தார். இன்றைக்கு இரும் மு.க.ஸ்டாலின் இதுவரை தமிழ்நாட்டிலே தொடக்கத்தில் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜர், அண்ணா என ஆட்சியைத் தொடர்ந்து வந்தனர். பின்னர், நாட்டில் ஊழலைத் தொடங்கிவைத்த கருணாநிதி வந்தார்.

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதா வந்தார். இருக்கின்ற முதலமைச்சர்களிலேயே மிக மிக மோசமான நிர்வாகத் திறமையற்ற எடுப்பார் கைப்பிள்ளை இன்றைக்கு இருக்கிற ஸ்டாலின். ஐந்து கட்சி அமாவாசை என்று ஒருவர் இருக்கிறார். அவர்தான் செந்தில்பாலாஜி. அவர் குறித்து கடுமையாக மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக அசிங்கமாகப் பேசினார் முக ஸ்டாலின். அதே வாயால், நாக்கால் இன்றைக்கு செந்தில்பாலாஜியின் தீனி சாப்பிட்டுக் கொண்டு தியாகி என்கிறார்கள் என்றார்.

தொடர்ந்து, அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசுகையில், உண்மையான திமுக எங்கு இருக்கிறது என்று சொன்னால், தந்தை பெரியார் வளர்த்த திராவிடர் கழகம் எங்கு இருக்கிறது என்று கேட்டால், எம்ஜிஆர் தோற்றுவித்த அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் என்பேன். ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பின்னர் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டேன் இனி என் வாழ்க்கையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்றார்.

அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் தெரியாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டார். நான்கரை ஆண்டுகால ஆட்சியைக் காப்பாற்ற பாஜகவுடன் கூட்டணி வைத்துத்தான் ஆக வேண்டும். அது இஸ்லாமிய தோழர்களுக்கு தெரியாதது அல்ல. ஆட்சியைக் காப்பாற்றத்தான் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது.

தற்போது நிலைமை மாறிவிட்டது பாஜகவுடன் கூட்டணி எந்தக் காலத்திலும் இனி கிடையாது. அதிமுகவின் அவைத் தலைவர் என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அதிமுக செய்தது. ஆனால் திமுக என்ன செய்தது. எனவே, வரும் காலங்களில் அதிமுகவை இஸ்லாமிய மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+