"ம்மா.. எழுந்திரும்மா" தாயின் சடலத்தை பார்த்து கதறி வெடித்த 4 வயது மகள்.. அரியலூர் சோகம்!
அரியலூர்: "அம்மா.. எழுந்திரும்மா... இங்க பாரும்மா.." என்று குழந்தை தாயின் சடலத்தை பார்த்து கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்துவிட்டது.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தேவமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தர்மேந்திரன்... இவரது மனைவி சுகன்யா. இவருக்கு வயது 27 ஆகிறது. கல்யாணம் ஆகி 5 வருடங்கள் ஆகின்றன.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள்.. மூத்த குழந்தை பவ்யாவுக்கு 4 வயசு.. கிரண்யா என்ற குழந்தைக்கு வெறும் 4 மாதம்தான் ஆகிறது.
தம்பதிக்குள் வழக்கமாக சண்டை வரும்போல் தெரிகிறது.. நேற்று முன்தினமும் தகராறு வெடித்துள்ளது.. இதனால் மனம் உடைந்த சுகன்யா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் எதற்காக இவர்களுக்குள் பிரச்சனை என தெரியவில்லை.
அப்போது சுகன்யாவின் உடலை கண்டு மகள் பவ்யா கதறி கதறி அழுதாள்.. அம்மா.. வா..ம்மா.. என்று அந்த குழந்தை அழுதது அங்கிருந்த எல்லோரின் மனசையும் பிசைந்தது.. பவ்யா அழுவதை பார்த்து கிராம மக்களே அழுதனர்.. தாயின் சடலம் பக்கத்திலேயே தவித்த குழந்தையை யாராலும் சமாதானப்படுத்தவே முடியவில்லை.
இதனிடையே மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக சுகன்யாவின் தந்தை ஆறுமுகம் தா.பழூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார்.. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடந்து வருகிறது. மேலும் கல்யாணம் ஆகி 4 வருடங்களே ஆவதால், வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் மற்றொரு புறம் நடக்கிறது. ஆனால், பவ்யாவின் அழுகை மட்டும் நிற்கவே இல்லை.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications