ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பூமி.. நிலவுக்குதான் பிரச்சனை! விண்கல் மோதல் குறித்து எச்சரித்த விஞ்ஞானிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட 2024 YR4 எனும் விண்கல், பூமி மீது மோத இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். ஆனால் இதற்கான வாய்ப்பு குறைவு என்றும், நிலவு மீது மோத வாய்ப்பு அதிகம் எனவும் தற்போது கூறியிருக்கின்றனர்.

நிலவு மீது விண்கல் மோதினால் அதனால் பூமிக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே இதுவும் சீரியஸாக அணுக வேண்டிய விஷயம் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

space Moon

2024 YR4 விண்கல் வரும் 2032 ஆம் ஆண்டு பூமியை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலி தீவில் இருந்த விண்வெளி ஆய்வகத்தில் இருந்து இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய குடும்பத்தின் கடைசி எல்லையான ஊர்ட் மேகக்கூட்டத்தில் இருந்து 2024 YR4 விண்கல் வந்திருப்பதாக தெரியவந்தது. இந்த மேக கூட்டத்தில் இருந்து சில விண்கற்கள் சூரியனின் ஈர்ப்பு விசை காரணமாக சூரியனை நோக்கி வருவது இயல்பான விஷயம்தான். அந்த வகையில் இந்த விண்கல் சூரியனை சுற்றி விட்டு மீண்டும் மேக கூட்டங்களை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த விண்கல்லை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பூமியை 2032 ஆம் ஆண்டு தாக்கம் என்று கணித்திருந்தனர். ஆனால் இந்த வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, தற்போது இந்த விண்கல் பூமியை தாக்குவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என்று கூறியிருக்கிறார்கள். இது ஆறுதலான செய்தியாக இருந்தாலும் இக்கல் நிலவை தாக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 130 முதல் 300 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் நிலவை தாக்க ஒரு சதவீத வாய்ப்பு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

நிலவு மீது விண்கல் மோதினால் நிலவின் சுற்றுவட்ட பாதை பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. அதாவது நிலவு பூமியை விட்டு விலகிச் சென்றுவிடும். அப்படி நடந்தால் பூமி பல பிரச்சனைகளை சந்திக்கும். குறிப்பாக கடலில் அலைகள் குறைந்து விடும். நிலவுதான் கடலின் அலைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. அலைகள் குறைந்துவிட்டால் கடலோர பகுதிகளில் வாழும் உயிரினங்கள் பாதிக்கப்படும்.

அதேபோல பூமியின் சுழற்சியையும் நிலவுதான் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. நிலவு இல்லை எனில் பூமியில் ஒரு நாள் என்பது, 24 மணி நேரத்திற்கு பதிலாக 2 மணி நேரமாகவோ, 3 மணி நேரமாகவோதான் இருக்கும். தவிர காலநிலை மற்றும் ஏற்படும். முன்கூட்டியே கணிக்க முடியாத அளவில் மழையும், வெயிலும், வறட்சியும், சூறாவளி புயலும் உருவாகும்.

அதேபோல பூமியின் சாய் கோணத்தை நிலவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஒருவேளை நிலவு இல்லை என்றால் பூமியின் அச்சு நேராக நிமிர்ந்து விடும். அப்படி நடந்தால் கோடை காலம் குளிர் காலத்தை தவிர வேறு எந்த காலமும் உலகத்தில் இருக்காது.

கடல் வாழ் உயிரினங்களின் பெரும்பாலானவை நிலவை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றன. எனவே நிலவு இல்லாமல் போய்விட்டால் இந்த உயிரினங்களின் இனப்பெருக்கம் உணவு தேடுதல் உள்ளிட்டவை பெரும் சிக்கலுக்கு உள்ளாகிவிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+