பெங்களூர் கலவரம்.. 110 பேர் கைது.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.. கமிஷ்னர் அதிரடி உத்தரவு!
காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் நடந்த கலவரத்தை தொடர்ந்து பெங்களூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
பெங்களூர்: காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் நடந்த கலவரத்தை தொடர்ந்து பெங்களூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
Recommended Video
பெங்களூர் புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக் போஸ்ட் காரணமாக இந்த கலவரம் வெடித்துள்ளது. இஸ்லாம் குறித்து இவர் பேஸ்புக்கில் வெளியிட்ட புகைப்படம் ஒன்று கலவரத்திற்கு காரணமாக அமைத்துள்ளது.

நவீனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை பெங்களூர் டிஜே ஹள்ளி போலீசார் பதிவு செய்யவில்லை என்ற கோபத்தில், அங்கு ஒரு தரப்பினர் கலவரத்தில் குதித்து உள்ளனர். டிஜே ஹள்ளி போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தி அங்கிருக்கும் வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
இன்னொரு பக்கம் காவல் பைசந்திரா பகுதியில் இருக்கும் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டை கலவர கும்பல் சூறையாடி உள்ளது. அவரின் வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தி, அவரின் வீட்டை சூறையாடினர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கலவரக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியானார்கள், 30 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் 110 பேர் இதுவரை இந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரிய அளவில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு முன் நடந்த கலவரத்தை தொடர்ந்து பெங்களூரில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. டிஜே ஹள்ளி மற்றும் கேஜி ஹள்ளி பகுதிகளில் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது என்று பெங்களூர் கமிஷ்னர் கமால் பந்த் அறிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications