Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.10,000 பந்தயம்.. ‛ராவா' 5 பாட்டில் மதுவை குடித்த 21 வயது இளைஞர்.. கடைசியில் பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 5 பாட்டில் மதுபானத்தை தண்ணீர், குளிர்பானம் கலக்காமல் குடித்து வெற்றி பெற்று ரூ.10,000 பந்தயம் வென்ற 21 வயது இளைஞர் அடுத்த சில மணிநேரங்களில் உயிரை விட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகாக நங்கலி போலீஸ் எல்லைக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கு வயது 21. திருமணமானவர். கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் கார்த்திக்கின் மனைவிக்கு குழந்தை பிறந்தது.

21-year-old-youngster-dies-after-drinking-5-bottles-of-neat-liquor-over-rs-10-000-bet

கார்த்திக் தனது நண்பர்களான சுப்பிரமணி, வெங்கடரெட்டி உள்பட 5 பேருடன் மதுபானம் குடிக்க சென்றார். மதுபான பாட்டில்களை அவர்கள் வாங்கி வைத்திருந்தனர்.

அப்போது கார்த்திக் தனது நண்பர்களிடம், ‛‛நான் தண்ணீர், குளிர்பானம் கலக்காமல் 5 பாட்டில் மதுபானத்தை குடித்து விடுவேன்'' என்று கூறினார். அதனை கேட்ட நண்பர்கள் அப்படி குடிப்பது கடினம் என்று கூறினார். ஆனால் கார்த்திக் தன்னால் முடியும் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர் வெங்கடேரெட்டி, ‛‛சொன்னது போல் 5 பாட்டில் மதுபானத்தையும் தண்ணீர், குளிர்பானம் கலக்காமல் குடித்தால் ரூ.10,000 தருகிறேன்'' என்று பந்தயம் கட்டினார்.

இதையடுத்து கார்த்திக் பந்தயத்தை ஏற்றுக்கொண்டார். அதோடு 5 பாட்டில் மதுபானத்தையும் கடகடவென திறந்து குடித்தார். பந்தயத்தில் வெற்றி பெற்று ரூ.10 ஆயிரத்தையும் பெற தயாரானார். ஆனால் கார்த்திக்கிற்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி விழுந்தார். அவரால் எழுந்திரிக்க முடியவில்லை.

இதனால் பதறிப்போன நண்பர்கள் அவரை மீட்டு அருகே உள்ள முல்பாகலில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி நங்கலி போலீசார் வழக்குப்பதிவு செய்து பந்தயம் கட்டிய வெங்கடரெட்டி மற்றும் சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தனர். மற்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவரிடம் கன்னடத்தில் பேரம் பேசி பணத்தை குறைத்த AI.. கைகொடுத்த சாட் ஜிபிடி - சுவாரசியம்
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் மதுபானம் குடிப்பதன் மூலம் 26 லட்சம் பேர் இறக்கின்றனர். இது உலகில் நடக்கும் மொத்த இறப்பில் 4.7 சதவீதமாகும். மேலும் மதுபானத்தை பொறுத்தவரை பாதுகாப்பாக குடிக்கிறார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. மதுபானம் குடித்தால் அது உடல்நலத்துக்கு முற்றிலும் கேடானதாக தான் இருக்கும். அதாவது நான் தினமும் கொஞ்சம் தான் மதுபானம் குடிப்பதாக நிறையபேர் சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கும் உடல்நலனை மதுபானம் பாதிக்கும். இதனால் மதுபானம் அருந்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+