விமான பணிப்பெண் பலாத்காரம்.. பெங்களூர் 5 ஸ்டார் ஹோட்டலில் வக்கிரத்தை காட்டிய 60 வயது பைலட்.. ஷாக்
பெங்களூர்: பெங்களூரில் 60 வயது நிரம்பிய விமானி ஒருவர் 26 வயது விமான பணிப்பெண்ணை ஹோட்டலில் வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
விமான பயணங்களின்போது விமானப்பணிப்பெண்களுக்கு விமானிகளும், உடன் பயணிக்கும் பயணிகளுக்கும் தான் பாதுகாப்பு தர வேண்டும். ஆனால் பெங்களூரில் 26 வயது விமான பணிப்பெண்ணை ஏமாற்றி கட்டாயப்படுத்தி 60 வயது நிரம்பிய விமானி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த திடுக்கிட வைக்கும் தகவல் பற்றிய விவரம் வருமாறு:

நவம்பர்18 ம் தேதி ஆந்திர பிரேதச மாநிலம் புட்டபர்தியில் இருந்து பெங்களூருவுக்கு ‛சார்ட்டர்' விமானம் வந்தது. இந்த விமானத்தில் ரோகித் சரண் என்பவர் விமானியாக இருந்தார். அவருக்கு வயது 60. இந்த விமானத்தில் 26 வயது இளம்பெண் பணிப்பெண்ணாக இருந்தார்.
பெங்களூர் வந்தவுடன் அவர்களால் மீண்டும் உடனடியாக புறப்பட முடியவில்லை. நவம்பர் 19 ம் தேதி தான் அவர்களின் விமானம் ‛புக்' செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரோகித் சரண், விமான பணிப்பெண் ஆகியோர் ஹோட்டலில் தங்கியிருந்தனர். ரோகித் சரண் 5 ஸ்டார் ஹோட்டலில் அறையில் நவம்பர் 18 ம் தேதி தங்கினர்.
இரவில் ரோகித் சரண், விமான பணிப்பெண்ணும் சந்தித்தனர். அப்போது சிகரெட் புகைத்த பைலட் ரோகித் சரண், விமான பணிப்பெண்ணுடன் பேசியபடி தனது ஹோட்டல் அருகே அழைத்து சென்றார். அதன்பிறகு தனது அறைக்கு வரும்படி கூறியுள்ளார். விமான பணிப்பெண் மறுத்துள்ளார். ஆனால் பைலட் ரோகித் சரண் விடவில்லை.
விமான பணிப்பெண்ணை கட்டாயப்படுத்தி தனது அறைக்கு அழைத்த சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளாரதாக கூறப்படுகிறது. விமான பணிப்பெண் எவ்வளவு கெஞ்சியும் அவரை விமானி ரோகித் சரண் விடவில்லை. அதன்பிறகு மறுநாளான நவம்பர் 29 ம் தேதி அவர்களின் விமானம் மீண்டும் ஹைதராபாத்தில் உள்ள பேகும்பேட்டைக்கு சென்றது.
அங்கு சென்றவுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண் பேகும்பேட்டை போலீசில் புகார் செய்தார். அங்கு ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பைலட் ரோகித் சரண் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவு 63ல்(பலாத்காரம்) வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதோடு சம்பவம் நடந்த இடம் பெங்களூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் வழக்கு ஹலசூருக்கு மாற்றப்பட்டது. தற்போது ஹலசூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications